Road Accident: கார் மரத்தில் மோதி 2 பெண்கள் பலியான சோகம்..!

கேரளாவில் கார் மரத்தில் மோதி இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: கார் மரத்தில் மோதி 2 பெண்கள் பலியான சோகம்..!
Road Accident (Photo Credit: Pixabay)

அக்டோபர் 28, பாலக்காடு (Kerala News): கேரள மாநிலம், மலப்புரம் (Malappuram) மாவட்டம் சங்கரம்குளம் கோக்கூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி அஷ்ரப் (வயது 50) - சஜ்னா (வயது 43). இவர்கள் இருவரும் தனது தாய் ஆயிஷாவுடன் (வயது 74), நேற்று மதியம், 2.30 மணிக்கு பெரிந்தல்மண்ணாவுக்கு சென்றுவிட்டு, திருத்தால-கொப்பம் புதிய சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து (Car Accident) விபத்துக்குள்ளானது. Delhi Air Pollution: தீபாவளி பரிதாபங்கள்! மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!

இதில், சஜ்னாவும் தாய் ஆயிஷாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டிய அஷ்ரப் படுகாயமடைந்து பெரிந்தல்மண்ணாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக பட்டாம்பி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து சம்பவம் குறித்து கொப்பம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 28, 2024 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).