மார்ச் 30, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா (Agra Railway Station Man Suicide) இரயில் நிலையத்தில், நபரொருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து, அங்கிருந்த பயணிகளிடையே பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியதன் காணொளி (Suicide CCTV Footage) வைரலாகியுள்ளது. ஆக்ராவில் உள்ள ராஜா மண்டி இரயில் நிலையத்தில் இருந்த சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி - ஜான்சி வரை இயக்கப்பட்டு வரும் காடிமாண் விரைவு (Gatimaan Express Train) இரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆக்ரா இரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்துகையில், உயிரிழந்தவர் கமலா நகர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் தேவானி (Harish Devnani) என்பதும், இவர் ஜவுளிக்கடை தொழிலதிபர் (Businessman) என்பதும் தெரியவந்துள்ளது. Mamata Banerjee: 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பாட்டு பாடி மகிழ்ந்த மம்தா பேனர்ஜி.!
இளம் வயதை கொண்ட ஹரிஷ் தேவானிக்கு சொந்தமாக ஜவுளி கடையும் உள்ளது. இவருக்கு கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சல் இருந்து வந்ததாக தெரியவருகிறது. அதனால் சோகமாகவே காணப்பட்டு வந்துள்ளார். அவருக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள காளி கோவிலில் ஹரிஷ் சாமி தரிசனம் செய்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து ராஜா மண்டி இரயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு வந்தவர், இரயில் வரும் வரையில் அமைதியாக காத்திருந்துள்ளார். பின்னர், இரயில் வரும் தருணத்தில் அங்கிருந்த பயணிகள் மற்றும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் யாவரும் சற்றும் எதிர்பாராத வேலையில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் மீது இரயில் சக்கரங்கள் ஏறி-இறங்கியதில் அவர் தலை துண்டித்து பலியாகினார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆக்ரா இரயில்வே காவல் துறையினர், ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரின் தற்கொலை கடிதத்தில் "என்னை மன்னித்துவிடுங்கள்" என்று எழுதி வைத்துவிட்டு இறுதி முடிவை தேடிக்கொண்டுள்ளார். அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
#आगरा सुसाइड का लाइव वीडियो आया सामने...
गतिमान ट्रेन के आगे कूदा कपड़ा व्यापारी... pic.twitter.com/BmnGK3ED0B
— ठाkur Ankit Singh (@liveankitknp) March 29, 2023