Delhi Horror: உண்ட வீட்டிற்கு துரோகம் செய்த பயங்கரம்; காதல் விவகாரத்தில் சோறுபோட்ட குடும்பத்தின் மகள் கொடூர கொலை.!

6 ஆண்டுகளாய் குடும்பத்துடன் வாழ்ந்த இளைஞர், அக்குடும்பத்தின் பெண்ணின் மீது ஆசைப்பட்டு திருமணம் செய்ய வற்புறுத்த, பெண் மறுத்ததால் இறுதியில் கொடூரம் நடந்துள்ளது.

Crime (Photo Credit: Pixabay)

ஜூலை 28, புதுடெல்லி (Crime News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயுரையா பகுதியை சேர்ந்தவர் இர்பான் (வயது 28). இவர் புதுடெல்லி மால்வியா நகர் பகுதியில் வசித்து வரும் உறவினர் சல்ஜாட் என்பவரின் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். சல்ஜாட்டுக்கு நர்கிஸ் என்ற 23 வயது மகளும், சமீர் என்ற மகனும் இருக்கின்றனர்.

சல்ஜாட் மெக்கானிக்காக வேலை பார்த்துவரும் நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக தனது வீட்டில் தங்கியிருக்கும் உறவினர் மகன் இர்பானுக்கும் அத்தொழிலை கற்றுக்கொடுத்துள்ளார். இர்பான் இராணுவத்தில் சேர முயற்சித்து, அதற்கான உடற்தகுதி ஈடுபாட்டில் இருந்து வந்ததாக தெரியவருகிறது.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஒரே வீட்டில் வசித்து வந்த இர்பான், தனது உறவினரான சல்ஜாட்டின் மகள் நர்கீஸை காதலிக்க தொடங்கியதாக தெரியவருகிறது. பலமுறை இர்பான் தனது காதலை நர்கீஸிடம் வெளிப்படுத்தியும் இருக்கிறார். Galaxy Ring: இனி மோதிரத்தை வைத்தே நமது உடல்நலத்தை கண்காணிக்கலாம்; விரைவில் அறிமுகமாகிறது சாம்சங்கின் கேலக்சி ரிங்.! விபரம் இதோ.! 

அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்த நர்கீஸ், இர்பானின் காதலை பலமுறை நிராகரித்துள்ளார். தனது தந்தையிடமும் சொல்லி இர்பானை கண்டிக்க சொல்லியுள்ளார். குடும்பத்தினரும் இர்பானை கண்டித்து பலன் இல்லை. இந்நிலையில், நேற்று மாலை நர்கீஸ் தனது பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அங்குள்ள பார்க் பகுதியில் நடந்து வந்த நர்கீஸிடம் இர்பான் தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்ய வற்புறுத்த, அவர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இர்பான், நர்கீஸை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், விரைந்து வந்து நர்கீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ததில் பெண் திருமணத்திற்கு ஒத்துழைக்க மறுத்ததால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement