Meerut Gang Rape: 9ம் வகுப்பு பயிலும் மாணவி 2 சிறார்களால் பாலியல் பலாத்காரம்; பல நாட்களாக பின்தொடர்ந்து நடந்த பயங்கரம்.!
பல நாட்களாக திட்டமிட்டு சிறுமியை கயவர்கள் சீரழித்த அதிர்ச்சி சம்பவம் மீரட்டை அதிரவைத்துள்ளது. தொடர் பாலியல் புகார்களால் கேள்விக்குறியாகும் உத்திரபிரதேசம் மாநிலத்தின் பெண்கள் பாதுகாப்பு விஷயம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 14, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், ரோஹ்டா கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி எப்போதும் தனியாக பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த சில வாரமாகவே சிறுமியை 2 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
அதாவது, சிறுமி பயின்று வரும் அதே பள்ளியில், 12ம் வகுப்பு பயின்று வரும் 2 மாணவர்கள் சிறுமியை பின்தொடர்ந்து இருக்கின்றனர். கயவர்களின் கேடான எண்ணத்தை புரிந்துகொண்ட சிறுமி, தனது பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமி தினமும் அவரின் சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று (சனிக்கிழமை, 12 ஆகஸ்ட்) சிறுமி பள்ளிக்கு சகோதரருடன் சென்றுள்ளார். மாலை அவரின் சகோதரருக்கு வேலை காரணமாக, அவரால் தங்கையை அழைத்து வர இயலவில்லை. Actress Janhvi Kapoor: தாயாரின் பிறந்தநாளில் அன்புள்ள அம்மாவை நினைவுகூர்ந்த ஸ்ரீதேவி மகள்; நெகிழ்ச்சி பதிவு..!
இதனால் சிறுமி தனியாக நடந்துவந்த நிலையில், அவரை பின்தொடர்ந்து வந்த 2 கயவர்களும் வயல்வெளியில் தனிமையான இடத்திற்கு சிறுமியை கடத்தி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வயலில் வேலை பார்ப்பவர்கள் வருகை தந்துள்ளனர்.
இவர்களை கண்டதும் கயவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே, விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சிறார்களுக்கு வலைவீசியுள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் 2 மாணவர்களில் ஒருவர் பள்ளிக்கு சம்பவத்தன்று வருகை தரவில்லை என்றாலும், திட்டப்படி இருவரும் பள்ளி முடிந்ததும் பின்தொடர்ந்து கொடூரத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.
(The above story first appeared on LatestLY on Aug 14, 2023 08:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

