மே 06, யமுனா அதிவிரைவுச்சாலை (Yamuna Express): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் பகுதியை சேர்ந்த யூடியூபர் அகஸ்தியா சௌகான் Agastya Chauhan (வயது 23). இவர் தனது இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்களில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் விடீயோக்களை பதிவிட்டு பிரபலமானவர். அதேபோல, தன்னிடம் இருக்கும் வாகனத்தின் அதிவேக திறனை சாலைகளில் சோதனை செய்தும் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், அகஸ்தியா தன்னிடம் இருந்த விலையுயர்ந்த Kawasaki இருசக்கர வாகனத்தின் உச்சபட்ச திறனை சோதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் யமுனா அதிவிரைவு சாலையை தேர்வு செய்த நிலையில், அங்கு வாகனத்தை இயக்கிய சில நொடிகளிலேயே அதிவேகத்தில் பயணம் செய்துள்ளார். அவரின் அதிவேக பயணம் கடந்த 4ம் தேதி எதிர்பாராத திருப்பத்தில் முடிந்தது.
அகஸ்தியா தனது வாகனத்தில் 250 கிலோமீட்டர் வேகத்திற்கும் அதிகமாக செல்லும்போது, ஒருகட்டத்தில் வாகன போட்டியின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே இருக்கும் சென்டர் மீடியாவில் மோதி இருக்கிறது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அகஸ்தியா, தக்க பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தும் தலைக்கவசம் உடைந்து தலை சிதறி பலியாகினார். Cyber Attack India: 3 மாதங்களில் 2 ஆயிரம் சைபர் தாக்குதலை எதிர்கொண்ட இந்தியா; மக்களே உஷாரா இருங்க.!
இந்த சம்பவத்தை அவரின் நண்பர்கள் நேரலையில் பதிவு செய்துகொண்டு இருந்த தருணத்திலேயே உயிர் பறிபோன சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் அகஸ்தியாவின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அகஸ்தியா மீது உள்ளூர் காவல் நிலையத்தில் அதிவேகமாக வாகனத்தை இயக்கியது தொடர்பாக பல புகார்கள் இருந்துள்ளன.
சுமார் 12 இலட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட அகஸ்தியா, தனது பார்வையாளர்களுக்கு என கெத்து காண்பிக்க நினைத்து தலை சிதறி உயிரிழந்துள்ளார். அதிவேகமாக வாகனங்களில் செல்லும் ஒவ்வொருவருக்கும் அகஸ்தியாவின் உயிரிழப்பு தகுந்த பாடம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
Biker and YouTuber Agastya Chauhan, professional biker, killed in accident y'day while attempting to hit 300 kmph on ZX10R superbike.
Don't mess with 𝗦𝗣𝗘𝗘𝗗 on public roads.
Frenzied, may be. Agony left to Parents, near n dear.
Don't become 𝗕𝗥𝗘𝗔𝗞𝗜𝗡𝗚 𝗡𝗘𝗪𝗦
— Raju K P V (@InsAdmnHYDTP) May 4, 2023