ஜனவரி 31, பழனி (Dindigul News): உலகத்தமிழர்கள் தை மாதத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்த கையுடன், தைப்பூச திருநாளை (Thaipusam Thirunal) சிறப்பிக்க தயாராகிவிடுவார்கள். தமிழர்களின் கடவுள் என போற்றி வணங்கப்படும் தமிழ்க்கடவுள் முருகன் (Lord Murugan), இந்து மதத்தின் புராணங்களின் கூற்றுப்படி சிவன் - பார்வதி (Shivan Parvathi) தம்பதியின் மகன் ஆவார். பெற்றோருக்கு செல்லப்பிள்ளையாக அவர் இருந்தாலும், சுட்டித்தனம், கோபம் என தாய்-தந்தையின் குணத்தை ஒருங்கே பெற்ற நபரும் ஆவார். இதனால் அவரின் வாழ்க்கையில் பல புயல்கள் வீசினாலும், தனது பெயரை உச்சரிக்கும் பக்தனுக்காக ஓடோடி வந்து உதவி செய்யும் குணம் கொண்டவர். தமிழ் மாதங்களின்படி, 10 வது மாதமான தை-யில், பூசம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படும் தைப்பூசம் (Thaipoosam), கேரளாவில் தைப்பூயம் எனவும் அழைக்கப்படுகிறது. பழனி முருகனை (Palani Murugan) வழிபட கேரளாவில் இருந்து பல ஆயிரம் மக்கள் தைப்பூசம் அன்று பழனியில் முகாமிட்டு இருப்பார்கள்.
நாரதர் கலகம் நன்மையில் முடியும்:
முருகன் தனது சகோதரர் விநாயகருடன் ஞானப்பழத்திற்கு சண்டையிட்டு, அப்பழம் கிடைக்காத கோபத்தில் தனது வாகனமான மயிலில் ஏறி பழனிக்கு வந்து பண்டாரனாக குடிகொண்டதாக கூற்றுகள் கூறுகின்றன. முருகன், விநாயகரிடம் உலகைச் சுற்றிவர நூதன போட்டியை ஏற்பாடு செய்து, அதில் வெற்றிபெறும் நபருக்கு ஞானப்பழம் வழங்கப்படும் என நாரதப்பெருமான் கூறுவார். அவரின் போட்டியை ஏற்ற இருவரில், விநாயகர் தனது புத்தி கூர்மையால் பெற்றோரே தனது உலகம் என கூறி, அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொள்வார். ஆனால், முருகனோ உலகைத்தானே சுற்றி வர வேண்டும் என்ற எண்ணத்தில், தனது வாகனமான மயிலில் ஏறி பூமியை சுற்றி வந்து பார்க்கும்போது, ஞானப்பழம் விநாயகர் கையில் இருக்கும். அதன்பின் முருகன் சத்தமிட்டு, வெறுப்படைந்து பழனிக்கு வந்துவிடுவார். அவர் பழனிக்கு குடியேறிய நாளே தைப்பூச திருநாளாக சிறப்பிக்கப்படுகிறது என்பது ஐதீகம். நாரதரும் முருகனின் தனிப்பெரும் செல்வாக்கை மக்கள் அறியும் வண்ணம் ஞானப்பழத்தை வைத்து பஞ்சாயத்து செய்து, முருகனை பழனிக்கு அனுப்பி மக்களை காக்க உறுதுணையாக இருந்து தனது கலகத்தினை நன்மையில் முடித்துக்கொண்டார். Thaipoosam Special: தைப்பூசம் 2025 - பழனி போக திட்டமா? சிறப்பு இரயில் சேவை அறிவிப்பு.!
2025 தைப்பூசம் தேதி, நல்ல நேரம் (Thaipusam 2025 Date Time):
முருகனுக்கு மேற்கொள்ளப்படும் விரத முறைகளில், அதிக சக்திகளையும், நன்மைகளையும் தரவல்ல விரதத்தில் ஒன்றாக இருக்கும் தைப்பூச விரதம், தை மாதத்தின் பௌர்ணமி அன்று, பூசம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. 2025ம் ஆண்டுக்கான தைப்பூசம் 2025, பிப்ரவரி 11, 2025 செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 10 ம் தேதி மாலை சுமார் 06:01 மணியளவில் தொடங்கும் பூசம் நட்சத்திரம், பிப்ரவரி மாதம் மாலை 06:34 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்திற்குள் நீங்கள் தைப்பூச விரத முறைகளை முடித்துக்கொள்ளலாம். தைப்பூசம் அன்று அதிகாலை எழுந்து குளித்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், வீட்டில் இருந்தபடி இறைவனுக்கு பழம், காய்கறி சாப்பாடு, பூசணி கூட்டு வைத்து படையலிட்டு வணங்கலாம். விரதம் இருந்து வழிபாட்டால் சிறப்பு. தைப்பூசத்தன்று முருகனுக்கு பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனையும் செலுத்துவார்கள். அந்த வகையில், காவடி, அலகு குத்துதல், பால் குடம், தீர்த்த குடம் என பல நேர்த்திக்கடனையும் செலுத்தலாம். பக்தர்களின் அவர்களின் விரதம் & விருப்பத்திற்கேற்ப மயில் காவடி, சந்தன காவடி, சர்ப்ப காவடி, சேவல் காவடி, அன்னக் காவடி, வேல் காவடி, பால் காவடி, வாள் காவடி, விளக்கு காவடி எடுக்கலாம்.
தைப்பூசம் விரதம் முறைகள் (Thaipusam Fasting Ritual Methods):
தைப்பூசத்திற்கு 48 நாட்களுக்கு முன்பு, 21 நாட்களுக்கு முன்பு, 11 நாட்களுக்கு முன்பு, 7 நாட்களுக்கு முன்பு என உங்களின் நிலைக்கேற்ப விரத நாட்களை முடிவு செய்துகொள்ளலாம். தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் ஒவ்வொரு நாளிலும் முருகனின் நாமத்தை உச்சரித்து விரதத்தை தொடங்க வேண்டும். விரதத்தை தொடங்கும் முதல் நாளே வீட்டினை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் மறுநாள் அதிகாலை எழுந்து நீரில் குளித்து உடலை தூமைப்படுத்துவதைப்போல, இறைவனை மனதில் நிறுத்தி உள்ளத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும். விரதத்தின் முக்கியத்துவமே உடலை வருத்தி பாதுகாப்பது போல, மனதில் இருக்கும் அழுக்களை வெளியேற்றத்தான் என்பதால், வஞ்சகம், கோபம், ஆக்ரோஷம் என எந்த நிலைக்கும் ஆளாக வேண்டாம். தினமும் குளித்துவிட்டு இறைவனை வணங்கி கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். ஓம் சரவணபவ, ஓம் முருகா, முருகனுக்கு அரோகரா, அப்பனே முருகா, முருகா சரணம் என முருகனின் மந்திரத்தை உளமார கூறுங்கள். இறைவனின் பக்தி பாடலை கேட்டு மனதை அமைதிப்படுத்துங்கள். விரதம் என்றாலே பட்டினி என உணவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்போர், அதனை எடுக்காமல் உடல்நலனை கெடுக்க வேண்டாம். எந்த தெய்வமும் பட்டினி கிடந்து என்னை வணங்கு என கூறவில்லை. எந்நிலையிலும் என்னை மறந்துவிடாதே என மட்டுமே கூறுகிறது. ஆகையால், விரதத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது உங்களின் விருப்பம். காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவுகளை சாப்பிட்டு, மனதார விரதம் இருங்கள். விரதம் இருக்க வேண்டும் என குழந்தைகளை பசியால் வாடவைப்பது, இறைவனுக்கு செய்யும் தீங்கு என்பதை மறக்க வேண்டாம். தீய சொல் பேசாமல், கோபம் அடையாமல் இறைவழிபாடு மேற்கொள்ளுங்கள். அதுவே விரதத்தின் அடிநாதம்.
தைப்பூசம் வாழ்த்துகள் (Thaipusam Wishes Tamil):
1. முருகனின் அருள் கிடைக்க அனைவருக்கும் தைப்பூச திருநாள் நல்வாழ்த்த்துகள்!
2. தமிழ்க்கடவுள் முருகனின் நல்லாசியை பெறுவோம்! எதிர்காலத்தை சிறப்பிக்க உறுதியேற்போம்!
3. அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்!
4. இன்று தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்!
5. இன்று தைப்பூசம் 2025! ஆன்மீக சொந்தங்களே முருகனின் அருள் பெறுக!
இத்துடன் உங்களுக்காக முருகனின் பக்தி பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதனை கேட்டு மனதை அமைதிப்படுத்துங்கள்:
டிஎம் சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தனின் சந்தனம் மணக்குது பாடல் (Santhnam Manakkuthu Song):
முருகன் பக்தி பாடல் (Murugan Devotinal Songs):
டிஎம்எஸ் முருகன் பக்தி பாடல் (TMS Murugan Songs):
தினமும் கேட்க வேண்டிய முருகன் பக்தி பாடல்கள் (God Murugan Songs):
தைப்பூசம் அன்று முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் பிற முருகன் கோவிலில்களில் சிறப்பு பூஜை, பிராத்தனை, அன்னதானம் ஆகியவையும் நடைபெறும். அன்று குடும்பத்துடன் சென்று முருகனை வணங்கி நீங்கள் நல்லாசியும் பெற லேட்டஸ்ட்லி வாழ்த்துகிறது.