Green Banana: அட்டகாசமான நன்மைகளை கொண்ட பச்சை வாழைப்பழம்.. மறக்காம கேட்டு வாங்கி சாப்பிடுங்க...!
உடலின் இரத்த ஓட்டம் சீர்படவும், இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக வழங்கிடவும் பச்சை வாழைப்பழம் உதவி செய்கிறது. பற்கள் தொடர்பான பிரச்சனைகளை நீக்கி, பற்களுக்கு தேவைப்படும் கால்சியம் சத்துக்களும் வழங்கும்.
டிசம்பர், 22: நமக்கு பரிட்சயமான பழங்களில் வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியது ஆகும். இன்று நமது ஊர்களில் எங்கும் விற்பனை செய்யப்படும் பச்சை வாழைப்பழத்தில் (Green Banana Benefits) உள்ள நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
வயிற்றுப்பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையானது பச்சை வாழைப்பழத்தில் உள்ளது. குடல் பகுதியில் சுரக்கும் அமிலம், குடலின் சுவரை அரிப்பதால் குடல் புண்கள் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழம் சாப்பிடுவோருக்கு அல்சர் குணமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பலன் தரும். Neem Brush: பற்களில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.. வேப்பங்குச்சி இருக்க கவலையேன்?..!
பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். உடலின் எடையை குறைக்க விரும்புவோர் பச்சை நிறத்திலான வழைப்பாழத்தை சாப்பிடலாம். இரத்தத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை நீக்க பச்சை வாழைப்பழம் உதவி செய்யும்.
நமது உடலின் இரத்த ஓட்டம் சீர்படவும், இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக வழங்கிடவும் பச்சை வாழைப்பழம் உதவி செய்கிறது. பற்கள் தொடர்பான பிரச்சனைகளை நீக்கி, பற்களுக்கு தேவைப்படும் கால்சியம் சத்துக்களும் வழங்கும். பச்சை வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை விளங்குகிறது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 22, 2022 08:45 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Feb 09, 2023 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

