Belt Saree: பெண்களின் முக்கிய பிரச்சினைக்கு அசத்தல் தீர்வு.‌. புடவைக்கு மேட்சிங்கான பெல்ட்.. விபரம் உள்ளே.!

பெல்ட் புடவைகள் கிளாசிக் புடவையில் ஒரு நவீன திருப்பம். உங்கள் புடவைக்கு பொருந்தக்கூடிய பல்வேறு பெல்ட் டிசைன்களில் இருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

Belt Saree: பெண்களின் முக்கிய பிரச்சினைக்கு அசத்தல் தீர்வு.‌. புடவைக்கு மேட்சிங்கான பெல்ட்.. விபரம் உள்ளே.!
Belt Saree (Photo Credit: @Instagram)

செப்டம்பர் 19, சென்னை (Fashion Tips): பெண்கள் பட்டுப்புடவை அணியும் போது நகைகளுக்கு ஏற்ப தங்க நிற ஒட்டியாணம் அணிவார்கள். அது அனைத்து நிற பட்டுப்புடவைகளுக்கும் பொருத்தமாக இருக்கும் ஆனால் டிசைனர் புடவைகள், சிங்கள் ஃபீளீட் புடவைகள் அணியும் போது இந்த மாதிரியான ஒட்டுயாணம் ஏற்றதாக இருக்காது. அதனால் தான் தற்போது பெண்கள் சாதாரண புடவைகளிலும் டிரெண்டிங்கான பெல்டுகள் (Saree with Belt ) வர துவங்கியிருக்கிறது. இது அனைத்து வடிவத்தினருக்கும் அழககாகப் பொருந்தும்.

பெல்ட்டுகள், புடவைகளின் பார்டர்களுக்கு நிறத்திலும் அல்லது புடவையின் டிசைன்களைப் போன்றும் வடிவமைத்து அணியலாம். இடுப்பு மிகக் குறுகலாக இருப்பவர்கள் சிறிய பட்டை அளவுடைய பெல்டுகள் பொருத்தமாக இருக்கும். சிலீவ் லஸ் பிளௌஸ் அணிவதாக இருந்தால் பெல்ட் நிச்சயம் உங்களை ஹைலைட்டாகக் காட்டும். Vasthu Plan: வீடுகட்டும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய வாஸ்து முறைகள் என்னென்ன? விபரம் இதோ.!

பிளௌஷ் டிசைன்கள் அல்லது நிறத்திற்கு ஏற்ப பெல்ட்களை வடிவமைத்து அணியலாம். இது ஃபுல் ஹெண்ட் பிளௌஷ் உடன் பிளைன் சாரிகளுக்கு கச்சிதமாகப் பொருந்தும். மேலும் பட்டை அளவு பெரிதாக வைத்து அணிந்தால் ராயல் லுக் கிடைக்கும். பிளைசுகளிலேயே அட்டாச் பெட்ல்களும் வருகின்றன. இதில் நேரடியாக புடவையை (முந்தானை) அதில் நுழைத்துக் கட்டலாம்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).