Beauty Tips: பெண்களுக்கான டிப்ஸ்... ஈவன் டோன் வழங்கும் ப்யூட்டி பிளண்டர்ஸ்..!

பிளண்டர்ஸ்களை எவ்வாறு தேர்ந்தெடுத்து வாங்குவது என்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் இந்த பதிவில் நாம் காணலாம்.

Beauty Tips: பெண்களுக்கான டிப்ஸ்... ஈவன் டோன் வழங்கும் ப்யூட்டி பிளண்டர்ஸ்..!
Blender (Photo Credit: @Auntyadaa X)

டிசம்பர் 27, சென்னை (Chennai): பெண்களுக்கான மேக் அப் புராடெக்டுகளில் முக்கியமாக தேவைப்படும் பொருளாக ப்யூட்டி பிளண்டர்ஸ் உள்ளது. இது முகத்தில் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்பவும், கிரீம்களுக்கு ஏற்பவும் பல வடிவங்களில் இருக்கிறது.

ஈவன் டோன் வழங்கும் பிளண்டர்ஸ்: இது ஃபவுண்டேஷன், அல்லது கிரீம்களை முகத்தில் சம அளவாக பரப்ப உதவுகிறது. இந்த ஸ்பான்ஞ்சுகள், மென்மையான பஞ்சால் தயாரிக்கப்படும் சருமத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும். 

பெரிய அளவுடை பிளண்டர்கள் எளிதாகவும் சமமாகவும் பிளண்ட் செய்யும். கன்னம், கழுத்து, நெற்றி பகுதிகளுக்கு பொருத்தமானதாக இருக்கும். சிறிய அளவுடைய பிளண்டர்கள் ஓரங்களிலும், கண்கள் கீழ் பகுதியிலும் பயன்படுத்த பொருத்தும். Karnataka Rakshana Vedike Members Hold Protest: பெயர் பலகைகளில் கன்னடம் கட்டாயம்... பெங்களூரில் வெடித்த போராட்டம்..!

பிளண்டர்கள் மிகுந்த சாஃப்டாக இருக்கும் வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும். பிளண்டர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடம் வரை நீடிக்குமாறு இருக்க வேண்டும். 

கிரீம்களுக்கும், பவுடர்களுக்கும் தனித்தனியாக பிளண்டர்கள் பயன்படுத்த வேண்டும். ஒரே பிளண்டரில் கிரீமையும் பவுடரையும் பயன்படுத்தும் போது வேகமாகவே அதன் மென்மை தன்மையை இழந்து விடும்.

தினமும் மேக் அப் அணிய பிளண்டர்களைப் பயன்படுத்தினால், வாரம் ஒரு முறை சோப் கலந்த தண்ணீரில் 3 நிமிடத்திற்கு ஊற வைத்து, உள்ளங்கைகளில் தேய்த்து கழுவி, சிறிது நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும். எப்போவாவது பயன்படுத்தினால் மாதம் ஒரு முறை கழுவ வேண்டும்.

(The above story first appeared on LatestLY on Dec 27, 2023 05:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).