How To Dress Up A T-shirt?: பல விதங்களில் டீ சர்டுகள்... யார் யார் என்ன அணிந்தால் கச்சிதமாக இருக்கும்?.!
டீ சர்டுகள் வகைகள் மற்றும் அதனை எவ்வாறு அணியலாம் என இப்பதிவில் நாம் காணலாம்.
ஜனவரி 23, சென்னை (Chennai): ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த பல ஆடைகள் பெண்களுக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கிறது. வெஸ்டர்ன் ஆடை கலாசரத்தில் பெண்கள் அதிகம் விரும்பி அணிவது ஜீன்ஸும், டீ-சர்டும் தான். இது எல்லா உடல் அமைப்புக் கொண்டவர்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது மேலும் வீட்டில் நைட் டிரெஸ்ஸாக முதல் ஆஃபீஸ் மீட்டிங்களுக்கு கூட டீ சர்ட்டுகள் தான் நல்ல கம்ஃபர்டையும் அளிக்கிறது. டீ சர்ட்டில் பல வகைகள் உள்ளது அவைகளை தங்களின் உடலுக்கும் இடத்திற்குமேற்ப அணிந்தால், அங்கு ஹைலைட்டாக தெரிவது உறுதிதான்.
காலர்ட் டீ சர்ட்: காலர் வைத்து அணிவது பெண்களுக்கு அழகாக காட்டுவதைக் காட்டிலும் கம்ஃபர்டாக இருக்கும். ஸ்போர்ட்ஸ் பர்சனாக இருந்தால் நிச்சயம் இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது ஹாஃப் ஹேண்டாகவும், ஓபன் காலர்டாக இருந்தால் மிகப்பொருத்தமாக இருக்கும். இது ஒல்லியாகவும் உயரமாகவும் இருப்பவர்கள் அணிவதால் அவர்களி உடலை அழகாக காட்டும். Thalapathy Vijay Bought A Brand New Car : நடிகர் விஜய் வாங்கிய புதிய எலெக்ட்ரிக் கார்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?.!
நாட் கிராப் டீ சர்ட்: சமீபமாக கிராப் டாப் இளம் பெண்களால் அதிகம் விரும்பப்படுகிறது. இந்த கிராப் டாப்பில் டீசர்ட் வகைகளில், இடுப்பில் நாட் போடப்பட்டிருக்கும் டீசர்ட்கள், அதிகமாக ஈர்க்கப்படுகிறது. கோடை காலங்களில் இந்த கிராப் டாப்கள் ஏற்றதாக இருக்கிறது. அதிக டிசைன்கள் இல்லாமல் சிம்பிளாக வெறும் சிறிய நாட் போடப்பட்டிருக்கும் டீ சர்ட்களை ஜீன், சார்ட்ஸ், டோன்னுடு ஜீன்கள், லாங் ஸ்கர்டுகள் என அனைத்துமே பொருந்தும்.
நெக் டிசைன் டீ சர்ட்: ரவுன்ட் நெக் டீசர்ட்கள், கேசுவல் வியராக அதிகம் பெண்களிடம் இருப்பது ரவுண்ட் நெக் டீசர்ட்கள் தான். இது அனைத்து விதத்திலும் பெண்களுக்கு பொருந்தும் கழுத்து டிசைகளை அவரின் உடல் வடிவத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம். V வடிவ கழுத்து கொண்ட டீ சர்ட்கள், கழுத்து குட்டை கழுத்து உள்ளவர்களுக்கு பொருந்தும். மேலும் உயரம் குறைவானவர்களும் வி வடிவ கழுத்துடைய டீசர்ட்களை அணிகையில் உயரமாக தெரிவர். மேலும் டீ சர்ட்களில், ஓவல், ப வடிவ, டிசைகளிலும் உள்ளது. 5-Year-Old Girl Dies of Heart Attack: தொடரும் மாரடைப்பு சம்பவங்கள்.. 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பு..!
கோல்ட் ஷோல்டர் டீ சர்ட்: கல்லூரி பெண்களை வெகுவாக இந்த டீசர்ட் கவர்ந்து வருகிறது. இது தோல்பட்டையில் இருபக்கமும் ஓபன் அல்லது ஸ்லிட் இருக்கும். கைகள் டைட்டாகவோ அல்லது லூஸாகவோ வரும். இந்த டீசர்ட்களில் கிராப் டீசர்ட்டில் இருப்பவை ராயலாகவும் டிரெண்டிங் ஃபேஷனாகவும் இருக்கிறது.
ஒன் சைடு ஷோல்டர் டீ சர்ட்: இந்த டீ சர்ட்கள், தோல்பட்டையின் ஒரு பக்கம் மட்டும் ஓபனாக இருக்கும். இதில் பல டிசைகலிலும் கிடைக்கிறது. நண்பர்களுடன் அவுட்டிங் செல்லும் போதும், ட்ரெண்டிங்கான பிளேஷ்களுக்கும் கச்சிதமாக சூட்டாகும். பார்டிகள், கான்சர்ட்டுகளுக்கு அணியும் விதத்தில் இருக்கும்.
ஹை நெக் டீசர்ட்: ஹை நெக் டீசர்கள் ராயல் லுக்கை தருபவை. மேலும் இது போன்ற டீ சர்ட்டுகள் அதிகம் குளிர்காலங்களில் பயன்படுத்துபவையாக உள்லது. இது நீண்ட கழுத்துடையவர்களுக்கு அழகாக இருக்கும். ஜெகின்ஸ், டைட் பேண்டுகலுக்கு ஏற்றதாக இருக்கும். India Stock Market: உலக பங்குச்சந்தை தரவரிசை... 4வது இடம் பிடித்த இந்தியா..!
பிரிண்டட் டீ சர்ட்: பிளாக் அல்லது பிரிண்ட் டீ ஷர்ட்களில் பிரிண்ட் செய்யப்பட்ட டீ சர்ட்கள் நண்பர்களுடன் ஹேங்அவுட் செய்ய பொருத்தமாக இருக்கும். ஸ்ட்ரிப்டு டீசர்ட்டுகள் கல்லூரி பெண்களுக்கு பர்ஃபெக் அவுட்ஃபிடைத் தரும். இதில் ஃப்லோரல் பிரிண்ட், 3டி பிரிண்ட், கிடைக்கிரது. தற்போது டிரெண்டிங்கான வாசகங்கள் அடங்கிய டீசர்ட்கள் பிரபலமாக உள்ளது.
ஓவர் சைஸ்டு டீ சர்ட்: ஓவர் சைஸ்டு டீ சர்டுகள், பெண்களுக்கு அதிக கம்பர்டை வழங்குவதால் இதன் டிரெண்டிம் அதிகரித்து வருகிறது. இது சாதாரண டி சர்டை விட 3 மடங்கு பெரியதாக இருக்கும். இது மிகவும் ஒல்லியானவர்கள் அணிகையில் சற்று பருமாக தெரிவர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)