செப்டம்பர் 05, சென்னை (Cinema News): இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் (A R Murugadoss) இயக்கத்தில், முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் உருவாகியுள்ள "மதராஸி" (Madharaasi) திரைப்படம் இன்று (செப்டம்பர் 05) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், அனிரூத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander)இசையமைத்துள்ளார். மேலும், நடிகை ருக்மினி வசந்த், நடிகர் வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன், விக்ராந்த் என பலரும் நடித்துள்ளனர். மாபெரும் வெற்றி பெற்ற அமரன் படத்தைத் தொடர்ந்து, மதராஸி படம் மூலம் ஆக்ஷன் கதையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். மதராஸி திரைவிமர்சனம் குறித்து இப்பதிவில் பார்க்கலாம். Holiday Movies List: தி கான்ஜுரிங் முதல் மதராஸி வரை.. விடுமுறை விருந்தாக சூப்பர் ரிலீஸ்கள்.. லிஸ்ட் இதோ.!
மதராஸி - திரை விமர்சனம்:
படத்தின் முதல் பாதி காதல் கலந்த ஆக்சன் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. இதில், ஒரு சில காட்சிகள் கிரிஞ்சாக இருந்தாலும் கதை சுவாரஸ்யமாக உள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் வில்லனாக வித்யுத் ஜமால் அசத்தியுள்ளார். அனிருத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது. சலம்பல பாடலில் வரும் சிவகார்த்திகேயனின் நடனம் கொண்டாடப்படுகிறது. இடைவேளை காட்சி சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து, பிளாஷ்பேக் காட்சிகள் சிறப்பாக உள்ளன. கணிக்கக்கூடிய திரைக்கதையாக இருந்தாலும், சிவகார்த்திகேயனின் நேர்த்தியான நடிப்பு, அனிருத்தின் பின்னணி இசை, எதிர்பாராத டிவிஸ்ட் மற்றும் கிளைமேக்ஸ் உணர்வுபூர்வமான காட்சி ஆகியவற்றை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக மதராஸி அமைந்துள்ளது. அமரன் படத்தை தொடர்ந்து, "மதராஸி" திரைப்படம் சிவகார்த்திகேயனின் வெற்றிப் படமாக அமையும் என நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.