Crime Scene (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 19, டெல்லி (Delhi News): வடகிழக்கு டெல்லியில் உள்ள சுந்தர் நக்ரி பகுதியில் 48 வயதான் ஒருவர், நேற்று (ஆகஸ்ட் 18) இரவு 7 மணியளவில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து, காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த நபரை உடனடியாக அவரது குடும்பத்தினரால் ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.  Viral Video: செல்பி எடுக்க முயன்றதால் தகராறு.. வைரல் வீடியோ உள்ளே..!

மாமா கத்தியால் குத்திக்கொலை:

இதனையடுத்து, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் தனது மருமகளை திட்டியுள்ளார். இதனை அந்தச் சிறுமி தனது அண்ணனிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் தனது மாமாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மருமகன் தனது மாமாவை கத்தியால் (Murder) குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.