Astrology: 2025 ஆம் ஆண்டு கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
2025 ஆம் ஆண்டு கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
நவம்பர் 25, சென்னை (Astrology Tips): மேஷம் மற்றும் ரிஷப ராசியில் இருக்கும் கார்த்திகை (Karthigai) நட்சத்திரக்காரர்களே, சென்ற ஆண்டு பல நல்ல முன்னேற்றங்களை உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிய ஆண்டாக இருந்து இருக்கும். இந்த நல்ல நிலை வரும் பங்குனி மாதம் வரை தொடரும். சித்திரை மாதம் முதல் எதிலும் கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீண் விரைய செலவுகள், நண்பர்களால், மூத்த சகோதரர்களால் பிரச்சனை, பணவிரயங்கள், பண நெருக்கடி, தொழிலில் லாபம் குறைவு, எதிரிகளால் தொல்லை, வேலைவாய்ப்பில் பிரச்சனை போன்ற கெடுபலன்கள் ஏற்படக்கூடும். November 25 Special Day: பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று..!
ஜாதக ரீதியாக திசை புத்திகள் நன்றாக இருந்தால் இந்த கெடுபலன்கள் அவ்வளவாக வேலை செய்யாது. தற்போதைய கிரக அமைப்பு படி குழந்தைகளால் சிரமங்கள், பண நெருக்கடி, வெளியூர் வெளிநாடு செல்வதில் தடங்கல், கடன் தொல்லை மருத்துவச் செலவுகள் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் உள்ளவர்களுக்கு நஷ்டமே மிஞ்சும். தற்போது ஆறு மாதங்களுக்கு ஷேர் மார்க்கெட் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏஜென்சி துறையில் உள்ளவர்களளுக்கும் தற்போது நேரம் ஆறு மாத காலத்திற்கு சரியில்லை. புரோக்கர் தொழில் பார்ப்பவர்கள் சண்டை சச்சரவுகளை விவாதங்களை, தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் வந்து நீங்கும் .
பரிகாரம்: அடிக்கடி சிவபெருமான் கோவிலுக்கு சென்று வாருங்கள் கிரக தோஷங்களை வெற்றி கொள்ளுங்கள்.
உங்கள் மதிப்பெண் 50.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.
(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

