Astrology: 2025 ஆம் ஆண்டு அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
2025 ஆம் ஆண்டு அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனைப் பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.
நவம்பர் 18, சென்னை (Astrology Tips): மேஷ ராசியில் உள்ள அஸ்வினி (Ashwini) நட்சத்திரக்காரர்களே, 2024 உங்களுக்கு நல்ல பல முன்னேற்றங்களை தந்த ஆண்டாக இருந்திருக்கும். இப்போது இருக்கும் நிலை வரும் பங்குனி மாதம் வரை நீடிக்கும். அடுத்து வரும் சித்திரை மாதம் முதல் எதிலும் தாங்கள் கவனத்துடனும், நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும். பண நெருக்கடி, குடும்பத்தில் பிரச்சனை தொழிலில் தடைகள், வேலை இழப்பு போன்ற கெடு பலன்களை கொடுக்கும். அதே நேரத்தில் வெளிநாடு பயணம், வெளிநாட்டில்,வெளியூர் வேலை வாய்ப்பு, புண்ணிய ஸ்தல யாத்திரை போன்ற நல்ல பலன்களையும் கொடுக்கும். Ayyappan Viratham 2024: "சாமியே சரணம் ஐயப்பா".. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விரத முறைகள்.., முழு விவரம் உள்ளே..!
படுக்கை வசதிகளை மேம்படுத்தும், புதிய கட்டில், மெத்தை, தலையணை,போர்வை, செருப்பு போன்ற சுகமாக தூங்குவதற்கு உரிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். புதிய கடன் பட நேரிடும். ஷேர் மார்க்கெட்டில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கடன் தொல்லை அதிகரிக்கும் அல்லது ஒரு சிலருக்கு உடல் நல குறைவு ஏற்படலாம். உடல் நலனில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகளை உண்டாக்கலாம்.
உங்கள் ஜாதகத்தில் திசை புத்திகள் நன்றாக இருந்தால் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். ஜாதகத்தில் திசை புத்திகள் சரியில்லை என்றால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விநாயகர் வழிபாடு வெற்றியை தரும்.
உங்கள் மதிப்பெண்- 60
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே. உங்கள் ஜாதக அடிப்படையில் பலன் கூறினால் தான் முழுமையான, சரியான இந்த ஆண்டு பலன்களை தெரிந்து கொள்ள முடியும்.
(The above story first appeared on LatestLY on Nov 18, 2024 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

