மார்ச் 7, சென்னை (Chennai): முட்டையை வைத்து நிறைய வகையான உணவுகள் செய்யலாம். அந்த வகையில் முட்டையை வைத்து பர்மா ஸ்டைல் முட்டை பேஜோ எப்படி செய்வது என தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 10
சில்லி ஃப்ளேக்ஸ் - 1 ஸ்பூன்
புளிக்கரைசல் - சிறிதளவு
எலுமிச்சை - 1
காய்ச்சிய எண்ணெயஂ - சிறிதளவு
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
தேவையான அளவு - எண்ணெய்
செய்முறை: முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ச்சிய எண்ணெய், புளிக்கரைசல், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் பூண்டு பற்களை பொடிதாக நறுக்கி அதையும் பொன்னிறமாக வதக்கி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். BMW i5 Flow NOSTOKANA: அனிமேஷனாகும் பாடி பேனல்.. பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா கார் வெளியீடு..!
அதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்துகொள்ளவும். இப்போது வேகவைத்த முட்டையை தோலுரித்து இரண்டாக சிறிதளவு கீறி விட்டு வதக்கிய வெங்காயம், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் கலவையை சிறிதளவு ஸ்டப்பிங் வைக்கவும். இப்போது காய்ச்சிய எண்ணெய் சில துளிகள் விடவும், பிறகு உப்பு கரைசல் சில துளிகள் விட்டு, எலுமிச்சம் சாறு சில துளிகள் அதன் மேலே விடவும். பிறகு புளிக் கரைசலை சில துளிகள் விடவும்.
இறுதியாக ஸ்டப்பிங்கில் பொடிதாக அறிந்த கொத்தமல்லி தழையை தூவி வைக்கவும். அவ்வளவு தான் பர்மா ஸ்ட்ரீட் ஃபுட் முட்டை பேஜோ (Egg Bhejo) தயார்.