ஜூலை 24, சென்னை (Kitchen Tips): குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு பட்டியலில் நூடுல்ஸ் நிச்சயமாக இடம் பெற்று இருக்கும்.பொதுவாக நாம் நூடுல்ஸ்ஸை இரவு நேரங்களில் வெளியில் சென்று பாஸ்ட் ஃபுட் அல்லது ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்து தான் சாப்பிடுவோம். அவ்வாறு சாப்பிடாமல் நாமே வீட்டில் நூடுல்ஸ் செய்து சாப்பிடலாமா? கோதுமையில் செய்யப்படுகின்ற இந்த நூடுல்ஸ் நமது உடலுக்கு வலிமையும், ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. இது நமது உடலுக்கு தீங்கும் விளைவிக்காது.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- 1 கப்
பெரிய வெங்காயம்- 1(பொடியாக நறுக்கியது )
முட்டை கோஸ்-1 (மெல்லிதாக நறுக்கியது)
குடை மிளகாய்-1 (மெல்லிதாக நறுக்கியது)
கேரட்-1 (துருவியது)
மிளகாய்- 3 (பொடியாக நறுக்கியது)
பூண்டு- 5 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மிளகு தூள்- 1 ஸ்பூன்
சோயா சாஸ்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு Boy Tortured Tuition Teacher: ஆசைக்கு உடன்படாத இளம்பெண்ணுக்கு வினோத தொல்லை: ஆன்லைன் ஆர்டர் கொடுத்து 2 கே கிட் அட்ராசிட்டி.. ஆப்படித்த சைபர் கிரைம்.!
செய்முறை:
முதலில் கோதுமை மாவை சிறிது சிறிதாக நீர் ஊற்றி, நன்கு பிணைந்துக் கொள்ள வேண்டும். பின்னர் வானொலியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். நீர் நன்கு கொதித்ததும், முறுக்கு பிழியும் கருவி கொண்டு, மாவினை சுடு நீரில் பிழிய வேண்டும். சிறிது நேரத்தில் மாவு நூடுல்ஸ் பதத்திற்கு வந்து விடும். அப்போது அதன் நீரினை வடித்து, நூடுல்ஸை (Noodles) தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்த பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் கண்ணாடி பதம் போல் வதங்கியவுடன் அதில் துருவி வைத்துள்ள கேரட் சேர்த்து கிளறி விட வேண்டும்.பின் அதில் வெட்டி வைத்துள்ள கோஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அனைத்தும் அரை வேக்காடாக வெந்த பின்அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும். How to Detect Hidden Cameras: ஓட்டலில் சீக்ரெட் கேமரா நினைத்து பயமா? கவலையே வேண்டாம்.. ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி? விபரம் உள்ளே..!
பின் இதில் உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் மிளகாய் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் நன்றாக கிளறி விட வேண்டும். இறுதியாக நாம் இப்போது இதில் நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்ளோதான் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்பைசியான கலர்புல்லான மற்றும் ஆரோக்கியமான நூடுல்ஸ் ரெடி!