மே 02, சென்னை (Kitchen Tips): தேங்காய் பர்பி (Coconut Burpee) எளிய முறையில் செய்து சாப்பிடும் சுவையான இனிப்பு வகையாகும். இதன் சுவை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் இதனை விரும்பி உண்பர். அவற்றை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் (துருவியது) - 3 கப்

சர்க்கரை - 2 கப்

நெய் - 3 கரண்டி

ஏலக்காய் தூள் - அரை கரண்டி. Lorry Collides With Bike: லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு; சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..!

செய்முறை:

முதலில், அடிகணமான கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி, தேங்காய்த்துருவலை (Thengai Burpee) நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் வறுத்தவுடன் அதில் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறிவிடவும். பின்னர், சர்க்கரை சுருண்டு தேங்காயுடன் நன்கு கலந்து வரும் நேரத்தில் ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய் ஊற்றி கலந்துகொண்டு, நெய் தடவி வைத்த தட்டில் கொட்டிக்கொள்ளவும். சிறிது நேரம் இதனை ஆற வைத்து விட்டு சமமான துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பர்பி ரெடி.