பிப்ரவரி 03, சென்னை (Kitchen Tips): எப்போதும் போல ஒரே மாதிரியான பாயசம் செய்து சாப்பிடுவதைவிட, வித்தியாசமான முறையில் அதுவும் பருப்பு பயன்படுத்தி எப்படி சுவையாக பாயசம் செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். பருப்பு பாயசம் (Paruppu Payasam) மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப்
பொடித்த வெல்லம் - அரை கப்
நெய் - 2 டீஸ்பூன்
பால் - 2 கப்
முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்)
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை Powerful Passports 2025: உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்ட்டுகள்.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? விபரம் உள்ளே.!
செய்முறை:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். நீரில் வெல்லத்தைக் கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். சுவையான பருப்பு பாயசம் (Moong Dal Payasam) தயார்.