Subsidies for Cotton: பருத்தி விவசாயிகளுக்கு ₹11,750 மானியம்.. மானாவாரி பருத்தியில் அதிக மகசூல் பெற.. விபரம் உள்ளே.!

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' என்ற புதிய திட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Subsidies for Cotton: பருத்தி விவசாயிகளுக்கு ₹11,750 மானியம்.. மானாவாரி பருத்தியில் அதிக மகசூல் பெற.. விபரம் உள்ளே.!
Cotton (Photo Credit: Pixabay)

ஜனவரி 29, சென்னை (Agri Tips): நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தின் கீழ், பருத்தி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில், உற்பத்தி திறனை அதிகரிக்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய முக்கிய இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண் - உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.

மானியம் விவரங்கள் (எக்டருக்கு)

ஆளில்லா வான்வெளி வாகனம் (ட்ரோன்) மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதற்கான வாடகை: ரூ.1250/-

வேளாண் சுற்றுச்சூழ்நிலை சார்ந்த பூச்சி மேலாண்மை: ரூ.4200/-

ஒருங்கிணைந்த உரச்சத்து மேலாண்மை தொகுப்புகள் வழங்க: ரூ.1400/-

அடர் நடவு முறைக்கு: ரூ.4900/-

இவ்வாறு பருத்தி பயிரிடும் விவசாயிகள் மொத்தம் ரூ.11,750/- மதிப்புக்கு மானியங்கள் பெற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள். Thai Amavasai 2025: தை அமாவாசை 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் அலைமோதும் கூட்டம்..!

மானாவாரி பருத்தியில் அதிக மகசூல் பெற...

  • தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ரகங்கள்: LRA5166, SVPR2, KC3, K11, K12

    அவசிய சத்துகளாக எக்டருக்கு 40:20:40 என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்துக்களை இட வேண்டும்./

  • விதைப்பிற்கு முன் 5கிலோ MN மிக்ஸர் மணலில் கலந்து இட வேண்டும்.
  • பயிர் வளர்ச்சி ஊக்கி cotton plus 2.5 கிலோ/ஏக்கர் தெளிக்க வேண்டும்.
  • பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும்.
  • களைகளை கட்டுப்படுத்த விதைத்த 3-வது நாளில் பென்டிமெத்தலின் 1-1.5லி தெளிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகுங்கள்.

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).