International Labour Day 2025: உலக தொழிலாளர் தினம் 2025; வரலாறு, முக்கியத்துவம் மற்றும் வாழ்த்து செய்தி இதோ..!

சர்வதேச தொழிலாளர் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் வாழ்த்து செய்தி குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

International Labour Day 2025: உலக தொழிலாளர் தினம் 2025; வரலாறு, முக்கியத்துவம் மற்றும் வாழ்த்து செய்தி இதோ..!
International Labour Day 2025 (Photo Credit: Team LatestLY)

ஏப்ரல் 30, சென்னை (Festival News): உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், அந்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றனர். தொழிலாளர்கள் இல்லாமல் எந்த துறையும் வளர்ச்சியை அடைய முடியாது. தொழிலாளர்கள் தான், சமூகத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகக் கருதப்படுகிறார்கள். தொழிலாளர்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்துவதற்கும், அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறியவும், ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி, சர்வதேச தொழிலாளர் தினம் (International Labour Day) கொண்டாடப்படுகிறது. Akshaya Tritiya 2025: அட்சய திருதியை 2025; செல்வ வளம் பெருக.. சுப காரியங்கள் நிகழ.. என்ன செய்ய வேண்டும்? விவரம் உள்ளே..!

தொழிலாளர் தினத்தின் வரலாறு:

19ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்தனர். 1886ஆம் ஆண்டில் ஒரு பெரிய வேலைநிறுத்தம் ஏற்பட்டது. அங்கு அமெரிக்க தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை நேரத்திற்காக போராடி வந்தனர். அப்போது அது சாத்தியமாகவில்லை. பின்னர், சிகாகோவில் இது வன்முறையாக மாறியது. அது 'ஹேமார்க்கெட் கலவரம்' என்று நினைவுகூரப்பட்டது. இச்சம்பவம் சர்வதேச தொழிலாளர் தினத்தின் தொடக்கத்தைக் குறித்தது. 1889ஆம் ஆண்டில், ஐரோப்பாவில் பல சோசலிசக் கட்சிகள் மே 1ஆம் தேதியை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாட ஒன்றிணைந்தன. அப்போதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தற்போது, 80 நாடுகளில் தொழிலாளர் தினம் மே 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவம்:

தொழிலாளர் தினத்தை சிறப்பிப்பது, சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் நாளாகும். இந்நாள் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. உலகத் தொழிலாளர்கள், அவர்களின் உரிமைகளை அவர்கள் பாதுகாப்பது முக்கியம். மேலும், தங்கள் நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று இந்நாள் வலியுறுத்துகிறது. உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, தங்களது உரிமைகளை மீட்க தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர் தின வாழ்த்து செய்தி:

உலக தொழிலாளர்களே

ஒன்று படுங்கள்

அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்..!

International Workers' Day Featured Pic 1 (Photo Credit: Team LatestLY)

உழைப்பே உலகின் மூலதனம்

மூலதனத்தின் முதலாளி உழைப்பாளி

உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்..!

International Workers' Day Featured Pic 2 (Photo Credit: Team LatestLY)

அயராது உழைத்துக் கொண்டிருக்கும்

அனைத்துத் தொழிலாளர்களுக்கும்

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!

International Workers' Day Featured Pic 3 (Photo Credit: Team LatestLY)

அர்ப்பணிப்புள்ள அனைத்து

தொழிலாளர்களுக்கும்

மே தின வாழ்த்துக்கள்..!

International Workers' Day Featured Pic 4 (Photo Credit: Team LatestLY)

உழைக்கும் கரங்களுக்கு

உன்னதமான

உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்..!

International Workers' Day Featured Pic 5 (Photo Credit: Team LatestLY)

 

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).