Women's Health: பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?.. இவை சாப்பிட்டால்தான் உடல்நலம் பெறலாம்..!
ஆரோக்கிய விவகாரத்தில் பெண்கள் கவனம் செலுத்தினால் மார்பக புற்றுநோய் (Breast Cancer), கருப்பை புற்றுநோய், பிறப்புறுப்பு நோய்கள் போன்றவை ஏற்படாது. பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பலவீனமடையும் எலும்புக்கு அதிகம் தேவைப்படுவது கால்சியம் ஆகும்.
டிசம்பர், 7: பெண்களுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் (Women Health). தங்களின் ஆரோக்கிய விவகாரத்தில் பெண்கள் கவனம் செலுத்தினால் மார்பக புற்றுநோய் (Breast Cancer), கருப்பை புற்றுநோய், பிறப்புறுப்பு நோய்கள் போன்றவை ஏற்படாது. மேலும், பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பலவீனமடையும் எலும்புக்கு அதிகம் தேவைப்படுவது கால்சியம் ஆகும். அதனைப்போல நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதயம் & நீரிழிவு நோய்களை தடுக்க, சருமத்தை பாதுகாக்க ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த விஷயம் குறித்து உலகளவில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, பெண்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஊட்டச்சத்து நிறைந்து காணப்படும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது அவசியமாகிறது. ஊட்டச்சத்துக்களை பெண்கள் தேடி சாப்பிட்டால் மட்டுமே, அவர்கள் தங்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சனைகளை எதிர்த்து போராடி நலன்பெற இயலும், இதனால் பெண்கள் தங்களின் உடலை பாதுகாக்க, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து இன்று காணலாம்.
வால்நட்: ஆண்டி-ஆக்சிடன்ட், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை வால்நட்டில் நிறைந்து காணப்படுகிறது. 2 அவுன்ஸ் வால்நட்டை 8 வாரத்திற்கு பெண்கள் சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நன்மை கிடைக்கும். இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படும். மார்பக புற்றுநோய் பாதிப்பு குறையும். தக்காளி: லைகோபீன் என்னும் ஆண்டி-ஆக்சிடென்ட் நிறைந்து காணப்படும் தக்காளியை பெண்கள் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய், வயிறு மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கப்படும். இது பெண்களின் ஆரோக்கியத்தை வழங்கும் காய்கறிகள் முக்கியமான பங்கை எடுத்துக்கொள்கிறது.
வாழைப்பழம்: இயல்பாகவே மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பெண்களுக்கு ஈஸ்டிரோஜனின் அளவு என்பது வெகுவாக குறையும். இதனால் அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படலாம். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தினை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்சனையில் இருந்து உடல் நலனை பாதுகாக்கிறது.

நெட்டில் இலை: இரும்புசத்து, போலிக் அமிலம், வைட்டமின் கே நிறைந்து காணப்படும் நெட்டில் மூலிகை இலையை தேநீர் போல பெண்கள் குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனை விரைவில் தீரும். இருப்பு சத்து உடலுக்கு கிடைத்து வலுப்பெறும். மேலும், நெட்டில் மூலிகை 30 நிமிடத்தில் நல்ல உறக்கத்தை தரவல்லது. Eyes On Red: அச்சச்சோ.. கண்கள் சிவந்த நிறத்தில் காணப்படுவது ஏன்?.. நமது சிறு அலட்சியமும் காரணமாக அமையலாம்; உஷார்.!
கீரை: ஒவ்வாமை, கர்ப்பகால நீரழிவு பிரச்சனை, பிறப்புறுப்பு தொற்று, அதிக உடலெடை கொண்ட பெண்களுக்கு ஏற்படும் நோய்ப்பாதிப்பில் இருந்து தப்பிக்க விரும்பும் பெண்கள் கீரை வகை உணவுகளை சாப்பிடலாம். கீரையில் இருக்கும் சல்போக்வினோவோஸ் குடலில் வளரும் கேடான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து உடல் நலத்தை பாதுகாக்கிறது.
பீட்ரூட்: சக்தி வாய்ந்த ஆண்டி-ஆக்சிடென்ட், அச்சிற்ச்சி எதிர்ப்பு வேதியியல் தடுப்பு பண்புகள், பீட்டலைன் நிறமிகள் போன்றவற்றை கொண்டுள்ள பீட்ரூட் வீக்கத்தினை எதிர்த்து போராட உதவும். அதனைப்போல, வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரித்து, செரோடோனின் அளவினை உயர்த்துகிறது. நமது மனநிலையை உயர்த்தவும் உதவி செய்கிறது.
சிவப்பு மிளகாய்: வைட்டமின் சி நிறைந்து காணப்படும் சிவப்பு மிளகாய், சருமத்தின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பேருதவி செய்கிறது. சிவப்பு மிளகாய் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சனைகள் குறையும். உணவில் வைட்டமின் சி அதிகளவில் சேர்த்துக்கொள்வது சாலை, காய்ச்சல் போன்ற அலர்ஜிகள் ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்யும்.
பயிறு வகைகள்: கட்டாயம் பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுப்பட்டியலில் இருப்பது பயிறு வகைகள். இதனை கட்டாயம் வாரம் ஒருமுறையாவது பெண்கள் சாப்பிட வேண்டும். பயிறு வகைகள் உடலின் சர்க்கரை அளவினை சமப்படுத்தும், எடை பராமரிப்பிற்கு உதவும், புற்றுநோய்க்கு எதிராக போராடும் தடுப்பு சேர்மத்தினை கொண்டிருக்கும்.
இலவங்கப்பட்டை: வயோதிக பெண்களுக்கு அல்சைமர் நோய் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்க இலவங்கப்பட்டை பேருதவி செய்கிறது. இதனை பெண்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் அல்சைமர் பாதிப்பு கட்டுப்படுத்தப்படும். மேலும், பெண்களின் இரத்த சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்க உதவி செய்யும்.
சால்மன் மீன்: அலர்ஜி எதிர்ப்பு அமிலம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள சால்மன் மீனை சாப்பிட்டால் இதய நோய் பாதிப்பு வெகுவாக குறையும். மேலும், பெண்களுக்கு ஏற்படும் கீழ் வாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
பூசணிக்காய்: கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும் பூசணிக்காயில், பீட்டா கரோட்டின் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ பார்வைத்திறனை மேம்படுத்தும். பார்வைக்கோளாறு பிரச்சனையை சரிசெய்யும். பூசணிக்காயை அன்றாடம் அல்லது வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தானிய பிரட்: தானியங்கள் மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் பிரட்டில் அதிகளவிலான நார்சத்து நிறைந்து காணப்படும். இதனால் மார்பக புற்றுநோய் அபாயம் வெகுவாக குறைகிறது. மேலும், இரத்தத்தில் இருக்கும் ஈஸ்டிரோஜன் அளவு கட்டுப்படுத்தப்படும்.
இதனைதவிர்த்து பெண்கள் சாப்பிட வேண்டியவை: சர்க்கரைவள்ளி கிழங்கு, ஆளி விதைகள், பூண்டு, முட்டை.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 03:27 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Jan 11, 2023 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

