ஜனவரி 04, சென்னை (Chennai): கோடையில் அதிகம் வெயிலில் வெளியில் செல்லும் பெண்களுக்கு முகம் கருமை அடைந்து, டேன் ஆகி பொலிவை இழந்து விடுகிறது. மேலும் பலருக்கும் முகத்தில் பருக்கள் அதிகரித்து முக சருமத்தின் மென்மைத் தன்மையை இழந்து விடுகிறது. இதை வீட்டிலேயே எளிய முறையில் சரி செய்ய முடியும். இதை தொடர்ந்து 7 நாட்கள் இரவில் பின்பற்றி வர கருமை நீங்கி முகம் பொலிவடைவதுடன் நிறமும் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1
கான்பிளவர் பவுடர் - 2 ஸ்பூன்
கற்றாழை மடல் - 1 அல்லது கற்றாழை ஜெல் - 4 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன் Arvind Kejriwal To Be Arrested By ED Today: கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியில் பரபரப்பு..!
செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி எடுத்து, அதை நன்கு அரைத்து, அதன் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையின் சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். கற்றாழை மடல் கிடைக்காதவர்கள், கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். பீட்ரூட் சாறு 2 ஸ்பூன், 2 ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை அடுப்பில் வைத்து, இதனுடன் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கிளரிக் கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடத்தில் இது கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்க வேண்டும். இந்த கலவையுடன், 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்து 10 நிமிடத்திற்கு கலக்க வேண்டும். பின் 10 நிமிடத்திற்கு பின் முகத்தில் இந்த தயார் செய்த கிரீமை தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்த 15 நிமிடத்திற்கு பின், இதை சுத்தமான நீரில் கழுவி விடலாம்.