Kitchen Tips: சமையலில் நீங்க சிறந்து விளங்கணுமா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

சமையல் என்பது நாம் கற்றறிய பல ஆயிரம் விஷயங்களை கொண்டது ஆகும். இன்று சில எளிமையான சமையல் குறிப்புகள் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம். தொடர்ந்து சமையல் அப்டேட்களை (Cooking Tips Tamil) பெற லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil)-ஐ பின்தொடரவும்.

Kitchen Tips: சமையலில் நீங்க சிறந்து விளங்கணுமா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!
Cooking Tips (Photo Credit: Pixabay)

ஜனவரி 29, சென்னை (Kitchen Tips): ஒவ்வொரு வீட்டிலும் சமையல் பணிகள் என்பது விடுமுறை இல்லாமல் தொடரும் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். வீட்டின் முக்கிய இடத்தை தக்கவைக்கும் சமையல் விஷயத்தில், நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விசயங்களை நிறைய இருக்கின்றன. அந்த வகையில், சில எளிமையான சமையல் ரகசியங்கள் உங்களுக்காக இங்கு பகிரப்படுகின்றன. இந்த தகவலை நீங்கள் தெரிந்துகொண்டால், சமையலின்போது அதனை பயன்படுத்தி உணவின் சுவை, சமையல் அறையின் சுத்தமான பராமரிப்பு என நீங்கள் அசத்தல் செயல்பாடுகளை வெளிப்படுத்தலாம்.

சமையல் டிப்ஸ் (Cooking Tips) பின்வருமாறு . ,

  • ரசம் வைக்கும்போது, அதன் சுவையை அதிகரிக்க தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.
  • நெய் மணக்க, அதில் வெல்லம் போட்டு வைக்கலாம்.
  • உடைத்த தேங்காய் முறையை நீரில் சேர்த்து வைக்க அல்லது உப்பு சேர்த்து வைக்க பலநாட்கள் கெடாமல் இருக்கும்.
  • கறிவேப்பில்லை, மல்லி, புதினாவை வாழை இலையில் சுற்றி வைக்க, நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
  • பயறு வகைகளை பூச்சிகள் அண்டாமல் இருக்க விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கலாம்.
  • சட்னி எதுவாக இருப்பினும் சிறிதளவு பூண்டு நல்ல மணத்தை வழங்கும். Thai Amavasai 2025: நாளை தை அமாவாசை 2025: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மறந்துடாதீங்க.. விபரம் உள்ளே.! 
  • தோசை கமகமக்க நல்லெண்ணெய் சேர்க்கலாம்.
  • முறுக்கு, சடை மாவை சூடான நீரில் பிசைந்து பொறிக்க மொறுமொறுப்பு கிடைக்கும்.
  • இட்லி பூ போல இருக்க, மாவில் ஒரு கரண்டி நெய் சேர்க்கலாம்.
  • வாடிய கொத்தமல்லியை இளம் சூடுள்ள நீரில் சேர்த்து எடுத்தால், அது புதிதுபோல் ஆகும்.
  • வாணெலியை சூடுபடுத்தி சாம்பார் வெங்காயம் சேர்த்து பிரட்ட, தோல் சுலபமாக உரிக்கலாம்.
  • தோசை மாவுக்கு உளுந்துடன் ஜவ்வரிசி சேர்க்க, தோசை மிருதுவாக, ருசியாக வரும்.
  • தேங்காய் துவையல் அரைத்தால் இஞ்சி சேர்க்க மணம், சுவை அதிகரிக்கும்.
  • குழம்பு, கூட்டு வகை சமையலுக்கு தேங்காய் பால் சேர்க்க சுவை அதிகரிக்கும்.
  • அவியலில் அரைத்த தேங்காய் விழுதை காய்கறிகளுடன் சேர்க்க சுவை தித்திக்கும்.
  • மஞ்சள் பூசணியில் இருக்கும் குடல் போன்ற பகுதியை எண்ணெய் விட்டு வதக்கி, வெங்காயம், வரமிளகாய், கடுகு-உளுந்து, புளி, உப்பு சேர்த்து தாளித்து சாப்பிடலாம்.
  • மழைக்காலத்தில் வடகம் பொரிய, எண்ணெய் ஊற்றும் முன்பே வாணெலியில் வடகத்தை லேசாக சூடாக வறுத்து, பின் மீண்டும் எண்ணெயில் சேர்த்து பொரித்தால் வடகம் சரியாக பொரியும்.
  • பச்சரிசி தோசைக்கு மாவு அரைத்தால் ஓம இலைகளையும் சேர்க்கலாம்.

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 08:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).