Signs of Dehydration: உடலில் நீரிழப்பை உணர்த்தும் காரணங்கள் என்னென்ன? கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விபரம் இதோ.!
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, திடீர் தாகம், மயக்கம் போன்ற உணர்வுகள் உடலில் நீரிழப்பை உறுதி செய்யும். ஆகையால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆகஸ்ட் 12, சென்னை (Health Tips): பொதுவாக கோடையில் உடலில் நீரிழப்பு (Dehydration) என்பது அதிகம் இருக்கும். ஆனால், தற்போது தென்மேற்குப்பருவமழை இந்தியாவை புரட்டியெடுத்தாலும், தமிழ்நாட்டில் அதனால் பரவலான மழை கிடைத்தாலும், சாதாரண நாட்களில் அடிக்கும் வெயிலின் அளவு 30 டிகிரியை கடந்து இயல்பாக பதிவாகி வருகிறது. இதனால் உடலில் நீரிழப்பு சார்ந்த பிரச்சனை காரணமாக பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது என்ற விஷயத்தை நாம் ஒருசில உணர்வுகள் அல்லது அறிகுறிகள் வாயிலாக கண்டறிய இயலும்.
திடீர் தாகம் (Thirsty):
நமது உடலில் ஏற்படும் நீரிழப்பின் முதல் அறிகுறி தாகம் ஆகும். நீரிலைப்பில் தாகம் ஏற்படுவதை உணர்த்த, முதலில் மூளைக்கு சமிக்கைகள் அனுப்பி வைக்கப்படும். இதனால் அவ்வப்போது சிறிதளவு நீரை நாம் குடிக்க வேண்டும். Tulasi Rasam Recipe: சளி, இருமலுக்கு அருமருந்தாக.. துளசி ரசம் செய்வது எப்படி..?
சிறுநீர் கழிப்பது:
நாம் நீரிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகும்போது, உடலில் திரவங்கள் சேமிக்கப்படும் என்பதால் சிறுநீர் வெளியேறுதல் தாமதத்தை அடையும். இதனால் நீண்டநேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், உடலில் நீரிழப்புக்கு ஆளாகியிருப்பதை உறுதி செய்யலாம். அதேபோல, சிறுநீரின் நிறமும் மாறியிருக்கும்.
வாயில் வறட்சி:
உடலில் நீரிழப்பு ஏற்பட்டு இருக்கும் பட்சத்தில் வாய் மற்றும் உதட்டு பகுதிகளில் வறட்சி உண்டாகி இருக்கும். உதடுகளில் சிறுசிறு வெடிப்புகளும் உண்டாகும். உதடு உலர்ந்து, வாயில் துர்நாற்றமும் ஏற்படும்.
சோர்வு:
நீரிழப்பு ஏற்படும்போது உடலில் பாயும் இரத்த ஓட்டத்தின் அளவு குறையும் என்பதால், தலைசுற்றல், சோர்வு போன்றவை உண்டாகும். ஒருசிலருக்கு மயக்கம் போன்றவையும் ஏற்படும்.
தலைவலி (Headache):
உடலில் நீரிழப்பு அதிகரித்துவிடும் பட்சத்தில், உடலில் இருக்கும் திரவங்களின் பற்றாக்குறை காரணமாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தலைவலி உண்டாகும். Kothamalli Sadam: உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் கொத்தமல்லி சாதம்.. சுவைபட செய்வது எப்படி?..!
சருமம் உலர்தல்:
நீரிழப்பு காரணமாக உதடு மட்டுமல்லாது சருமமும் வறட்சி அடையும். இதனால் சருமத்தின் மென்மைத்தன்மை பாதிக்கப்படும். ஒருசிலருக்கு அரிப்பு சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படலாம்.
கண்கள்:
உடலில் நீரிழப்பு இருந்தால் கண்கள் வெகுவாக பாதிப்பை சந்திக்கும். இதனால் நீரிழப்பை ஈடு செய்ய கண்களுக்கு அருகில் இருக்கும் திரவத்தையும் உடல் உறிஞ்சிக்கொள்ளும். இதனாலேயே கண்களை சுற்றிலும் குழி விழுந்தாற்போல தோற்றமும் உண்டாகும்.
தசையில் பிடிப்பு:
நீரிழப்பு பிரச்சனை காரணமாக உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை தன்மையை உண்டாக்கும். இதனால் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது அதற்குப்பின் தசைப்பிடிப்பால் அவதிப்பட நேரிடும். இதனால் உடலுக்கு தேவையான அளவு நீரை குடிப்பது நல்லது.
(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

