ஏப்ரல் 24, சென்னை (Kitchen Tips): பால் கொழுக்கட்டை என்பது அரிசி மாவு, வெல்லம் மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றை கொண்டு சுவையாக செய்யப்படும் தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்பு (Sweets) வகை ஆகும். இதனை குழந்தைகள் விரும்பி உண்பர். அதனை எப்படி செய்வது என்பதை இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 5 கப்
வெல்லம் - 3 கப்
தேங்காய் - 1 (துருவியது)
முந்திரி திராட்சை - சிறிதளவு
ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் - அரை கரண்டி. Land Mine Explosion: கண்ணிவெடி தாக்குதல்; பாலம் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு..!
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, இதில் பால் தண்ணீர் கலவையை சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். கொழுக்கட்டை மாவு தன்மை வந்த பிறகு, நம் கைகளில் நெய் தடவி மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும். பின்னர், ஒரு கடாயில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை உருக்கவும். ஒரு கடாயில் தேங்காய் பால் சேர்த்து கொண்டு, அதில் வெல்லம் பாகுவை சேர்த்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பானதும் அதில் உருண்டைகளை சேர்க்கவும். சிறிது நேரம் கிளறி விட வேண்டும். அது கெட்டியான தன்மை வந்தவுடன், அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து, துருவிய தேங்காயை தூவிவிட வேண்டும். இதோ சுவையான பால் கொழுக்கட்டை தயார்.