Egg Pakoda Recipe: முட்டை வச்சு மொறுமொறுப்பான பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

மொறுமொறுப்பான முட்டை பக்கோடா எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.

Egg Pakoda Recipe: முட்டை வச்சு மொறுமொறுப்பான பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
Egg Pakoda (Photo Credit: YouTube)

நவம்பர் 27, சென்னை (Kitchen Tips): பெரும்பாலானவர்களுக்கு முட்டை மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். பொதுவாக, இந்த முட்டையைக் கொண்டு, ஆம்லெட், போண்டா, குழம்பு என்று தான் செய்வோம். ஆனால், முட்டையைக் கொண்டு வித்தியாசமாக பக்கோடா செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். அந்தவகையில் முட்டை பக்கோடா (Egg Pakoda) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Bread Vada Recipe: பிரட் வைத்து மொறுமொறுப்பான வடை செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

முட்டை - 10

மிளகாய்த்தூள் - 2 கரண்டி

சீரகத்தூள் - 1 கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 கரண்டி

காஷ்மீர் மிளகாய்த்தூள் - அரை கரண்டி

கரம் மசாலா - அரை கரண்டி

அரிசி மாவு - அரை கப்

கான்பிளவர் மாவு - அரை கப்

எலுமிச்சை சாறு - ஒரு கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் முட்டையை மிதமான தீயில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். இப்போது, அதன் தோலை நீக்கி வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து விடவும்.
  • பிறகு, மற்றொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள முட்டைகளை எடுத்துப் போட்டு பொறித்து எடுத்தால் மொறுமொறுவென முட்டை பக்கோடா ரெடி.

(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).