Sakkarai Pongal Recipe: பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் ரெசிபி எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம்.
ஜனவரி 08, சென்னை (Kitchen Tips): பொங்கல் பண்டிகையை (Pongal Recipes) தித்திப்புடன் கொண்டாடி மகிழ அனைவரது வீட்டிலும் சர்க்கரை பொங்கல் செய்யலாம். சிலருக்கு சர்க்கரை பொங்கல் எப்படி சரியாக சமைப்பது என தெரியாது. குழைந்து விட்டால் சர்க்கரை பொங்கலின் ருசி போய்விடும். எனவே, சர்க்கரை பொங்கல் (Sakkarai Pongal) தயாரிப்புக்கான பொருட்கள், எப்படி செய்வது என்பதனை பற்றி இந்த பதிவில் காண்போம். Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
நெய் - 3 கரண்டி + 7 தேக்கரண்டி
தண்ணீர் - 4 கப் + கால் டம்ளர்
பால் - அரை கப்
பாகு வெள்ளம் - 2 கப்
முந்திரி, திராட்சை - சிறிதளவு
லவங்கம் - 3
ஏலக்காய் - 1 தேக்கரண்டி
சாதிக்காய் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் பச்சரிசி, பாசி பருப்பை எடுத்துக் கொண்டு, இவை இரண்டையும் சேர்த்து தண்ணீரில் நான்கு முறை நன்கு கழுவவும். தற்போது, ஒரு பெரிய குக்கரில் கழுவிய பச்சரிசி மற்றும் பாசி பருப்பை போடவும். இதில் 3 கரண்டி நெய் ஊற்றவும்.
- இதன் பிறகு, அரை கப் பால் எடுத்து குக்கரில் ஊற்றவும். மீண்டும் அதே கப் கொண்டு நான்கு முறை தண்ணீர் எடுத்து குக்கரில் சேர்க்கவும். மிதமான சூட்டில் வைத்து 6 முறை விசில் அடித்தவுடன், அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- தற்போது, அரிசியை அளவிட பயன்படுத்திய கப் கொண்டு அதில் 2 முறை பாகு வெள்ளம் எடுத்துக் கொள்ளவும். இதன் பின்னர் ஒரு பேனில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். தண்ணீர் கொதித்த பிறகு பாகு வெள்ளத்தை போடவும்.
- இதற்கு ஒரு வடிகட்டி பயன்படுத்திய பிறகு, மீண்டும் ஆறு முதல் ஏழு நிமிடங்களுக்கு பாகு வெள்ளத்தை உருக்கவும். ஒரு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
- ஒரு பெரிய கடாயில் 7 தேக்கரண்டி நெய் ஊற்றி அது சூடான பிறகு மூன்று லவங்கம், தேவையான அளவு முந்திரி போடவும். முந்திரி பொறிந்தவுடன் வேகவைத்த பச்சரிசி - பாசி பருப்பை மொத்தமாக கடாயில் சேர்க்கவும்.
- நெய்யுடன் நன்றாகக் கலக்கும்படி கிண்டிவிட்டு காய்ச்சி வைத்திருக்கும் வெள்ளைப் பாகை ஊற்றவும். 8 நிமிடங்களுக்கு இதனை வேகவைக்க வேண்டும். அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை சாதிக்காய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும்.
- இறுதியாக, ஒரு சிறிய பேனில் நெய் ஊற்றி திராட்சையை வறுத்து, சர்க்கரை பொங்கலை அடுப்பில் இருந்து எடுத்தபிறகு சேர்க்கவும். அவ்வளவுதான் பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் ரெடி.
(The above story first appeared on LatestLY on Jan 08, 2025 07:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

