Palakottai Thuvaiyal Recipe (Photo Credit: @SenkottaiSriram X)

அக்டோபர் 23, சென்னை (Kitchen Tips): முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை (Jackfruit) நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதனை சாப்பிட்ட பிறகு அதில் உள்ள பலாக்கொட்டையை (Palakottai Thuvaiyal) பயன்படுத்தி சுவையாக துவையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பலாக்கொட்டை - 10

வற்றல் மிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 4 பல்

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

ஜீரகம் - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - அரை கப்

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

உப்பு - தேவையான அளவு. Murungai Keerai Thokku Recipe: இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை தொக்கு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பலாக்கொட்டையைப் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர், வறுத்த பலாக்கொட்டையை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து, வற்றல் மிளகாயையும் அதில் போட்டு, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் ‌‌2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிதாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்பு, மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வறுத்த பலாக்கொட்டை, வற்றல் மிளகாய், ஜீரகம், வதக்கிய சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து எடுக்கவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான பலாக்கொட்டை துவையல் ரெடி.