மே 04, புதுடெல்லி (New Delhi): இந்திய தேர்தல்கள் 2024 (Indian General Elections 2024) காரணமாக இந்திய அரசியல்களமே பரபரப்புடன் காணப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாக கருதப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் 2024ஐ உலகமும் உற்றுநோக்கி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ள இத்தேர்தல் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, மீண்டும் தன்னை ஆளும்கட்சியாக நிலைத்திருக்க தேவையான பிரச்சார வியூகங்களை முன்னெடுத்து இருக்கிறது. 2 மக்களவை தேர்தலிலும் வாய்ப்பை இழந்த காங்கிரஸ், தற்போதைய முறை புதிய வியூகத்துடன் ஆட்சிக்கட்டிலில் அமர முயற்சித்து இருக்கிறது.

மக்களை உறுப்பினர்களை தேர்வு செய்யும் அங்கீகாரம்: இந்த தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு, இரண்டுகட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சிய பிற தேர்தல்களும் அடுத்தடுத்து நிறைவுபெற்று, ஜூன் மாதம் 04ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். சிக்கலான மற்றும் பலகட்ட விவகாரம் கொண்ட இந்திய மக்களவை தேர்தல், மக்களவை உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் அங்கீகாரத்தை, 18 வயதுகடந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்குவதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. Mitchel Starc in Prime Celebration: சொந்த மண்ணில் படுதோல்வியடைந்த மும்பை; ஸ்டெம்பை தெறிக்கவிட்ட மிட்செல் ஸ்டார்க்.. புல்லரிப்பை ஏற்படுத்தும் அசத்தல் காணொளி இதோ.! 

வாக்காளர் விழிப்புணர்வு ரங்கோலி:

ரங்கோலி கோலங்கள்: ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறையும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியால் இந்திய அரசு நிர்வகிக்கப்படும் என்பதால், மிகப்பெரிய போட்டித்தன்மை கொண்ட அரசியல் பெருவிழாவாக மக்களவை தேர்தல் இருக்கின்றன. 2024 தேர்தலை பொறுத்தமட்டில் லேட்டஸ்ட்லி (LatestLY Tamil) நிறுவனமும், உங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுவது மட்டுமின்றி காலத்தின் மாற்றத்திற்கேற்ப (Matdan Jagrukta Rangoli Designs) ரங்கோலி கோலங்கள் குறித்த விழிப்புணர்வு (Vote for Better India Rangoli Designs) தொகுப்புகளையும் வழங்குகிறது.

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: ஒவ்வொரு அரசியல்கட்சி வேட்பாளரும், அவரின் ஆதரவாளரும் வெற்றிக்காக கடுமையாக உழைக்கின்றனர். தீர்ப்பு மக்கள் கையில் இருக்கிறது. இவர்கள் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு தாங்கள் இயற்றும் திட்டங்கள், தங்களின் கொள்கை, எதிர்கால செயல்பாடுகள் உட்பட பலவற்றை வாக்குறுதியாக கொடுக்கின்றனர். இதில் சில சர்ச்சையையும் சந்திக்கின்றன. ஒவ்வொரு வீடு வீடாக தொடரும் பிரச்சாரம், பேரணி, விளம்பரம், சமூகவலைத்தளங்களில் பரப்புரை என பல பரிணாமத்தை கொண்டுள்ளது. அதிகாரத்திற்காக அரசியல் சண்டையிடும் கட்சிகளுக்கு மத்தியில், நாம் நமது ரங்கோலி விழிப்புணர்வு வீடியோக்களையும் காணலாம். இதனை நீங்கள் உங்களின் வீட்டிலும் மேற்கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். Savuku Shankar Arrest: காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசு; யூடியூபர் சவுக்கு சங்கர் கைது.! 

வாக்களிப்போம், தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம்!