IPL Auction 2025 Live

Obesity & Kidney Problem: உடல்பருமனும், சிறுநீரக கோளாறும்... பெண்களும்-ஆண்களும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ.!

சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டு, எந்நேரமும் சோர்வு மற்றும் மூளை செயல்பாடுகள் குறைதல் போன்ற சங்கிலித்தொடர் விளைவுகளும் ஏற்படும்.

Obesity With Food (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 11, சென்னை (Health Tips): இன்றைய பெரும்பாலான பெண்களின் கவலை உடல் எடை மற்றும் உடல் பருமன் (Women Obesity) தொடர்பான பிரச்சனை ஆகும். உடல் பருமன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பைநோய், பெருங்குடல் & கருப்பை புற்றுநோய், பக்கவாதம், கீல்வாதம், மனரீதியான அழுத்தம் உட்பட பல விஷயங்களுக்கு காரணியாக அமைகிறது.

இதனால் பெண்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உணவுக்கட்டுப்பாடு அவசியம் எனினும், அதனை தவறாக புரிந்துகொண்ட காலை உணவை தவிர்த்தல் போன்றவை மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும்.

காலை நேரத்தில் உணவை தவிர்த்து வந்தால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைந்து வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்சனை ஏற்படும். உடல் பருமன் சார்ந்த பிரச்சனையை அதிகரிக்க முதலில் வழிவகை செய்யும். பசியை மறந்து நொறுக்குத்தீனிகள் மீது கவனம் ஏற்பட்டு, அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள நேரிடும். IND Vs PAK: இந்தியா-பாகிஸ்தான் பரபரப்பை மீண்டும் தண்ணீர் ஊற்றி அணைக்குமா மழை?.. நடக்கப்போவது என்ன?..! இன்றைக்கு போட்டி உறுதி..! 

Male & Female Kidney Pics (Photo Credit: Pixabay)

நாம் சாப்பிடும் உணவுகளில் பதப்படுத்தப்பட்ட உணவு, குளிர்பானம், துரித உணவு, சர்க்கரை நிறைந்த உணவு, கொழுப்புகள் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். உடலுக்கு தேவைப்படும் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின், தாது உப்புகள் சரியான விகிதத்தில் கிடைக்கும் உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்.

பெண்களின் (Women Health) ஆரோக்கிய விஷயத்தில் முக்கியமாக தேவைப்படுவது இரும்புசத்து, வைட்டமின் டி, பி, காம்ப்ளக்ஸ் போன்றவை ஆகும். காலை நேர உணவாக தானியம், பழங்கள், புரதம் சார்ந்த உணவுகள் சாப்பிட வேண்டும். மதியம் மற்றும் இரவு வேளையில் கோழி, மீன், வேகவைத்த காய்கறிகள் சாப்பிடலாம். நொறுக்குதீனிகளுக்கு பதில் பழங்கள் சாப்பிட வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடித்து, உடற்பயிற்சியும் மேற்கொண்டால் நன்மை கிடைக்கும்.

இரத்தத்தினை வடிகட்டும் தன்மை கொண்ட சிறுநீரகம் (Kidney), உடலில் முக்கியமான உறுப்பாகும். செரிமான அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், திரவவழியில் சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். சிறுநீரகத்தின் நிறம் மாறி அல்லது அசாதாரணமாக சிறுநீர் இருந்தால் சிறுநீரக பிரச்சனையை அவை உணர்த்தும். Realme C51 Launch: பிளிப்கார்டில் நள்ளிரவு தொடங்குகிறது ரியல்மி C51 விற்பனை; பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற அசத்தல் ஸ்மார்ட்போன்..! விபரம் இதோ..! 

Obesity (Photo Credit: Pixabay)

சிறுநீரகம் சரியாக செயல்படுத்த பட்சத்தில், கழிவுகளை சுத்தம் செய்யும் முறை என்பது கேள்விக்குறியாகும். அக்கழிவுகள் இரத்தத்தில் கலந்து வாயில் கடுமையான துர்நாற்றம் உண்டாகும். சிறுநீரகம் சேதமாகும் பட்சத்தில் சுவை, பசியின்மை பாதிப்பு ஏற்படும். குமட்டல், வாந்தி உண்டாகும்.

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி என்பது பாதிக்கப்பட்டு, எந்நேரமும் சோர்வு மற்றும் மூளை செயல்பாடுகள் குறைதல் போன்ற சங்கிலித்தொடர் விளைவுகளும் ஏற்படும். சிறுநீரக பகுதியில் ஏற்படும் வலியும், சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறியாகும்.