Lays Classic Potato Chips: லேஸ் கிளாசிக் நொறுக்குதீனியால் ஒவ்வாமை? தயாரிப்புகளை திரும்பப்பெற்ற நிறுவனம்.!
பால் ஒவ்வாமை சார்ந்த விஷயத்தால் லேஸ் சாப்பிட்டு உடலநலக்குறைவை எதிர்கொண்ட காரணத்தால், அமெரிக்காவில் உள்ள 2 மாகாணங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட லேஸ் பாக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
டிசம்பர் 21, ஒரேகான் (World News): அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் (Washington), ஒரேகான் (Oregan) மாகாணத்தில், கடந்த சில வாரங்களாக விற்பனை செய்யப்பட்ட லேஸ் கிளாசிக் (Lay’s Classic Potato) 13 அவுன்ஸ் (328 கிராம்) அளவுள்ள சிப்ஸ்-களில், அதனை உட்கொண்ட நபர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பால் ஒவ்வாமை என அழைக்கப்படும் பாதிப்பு, அதனை சாப்பிட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 23, 2024 அன்று பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், லேஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை திரும்ப பெற்றுள்ளது.
திரும்ப பெறப்பட்ட தயாரிப்புகள்:
லேஸ் கிளாசிக் உருளைக்கிழங்கு சிப்ஸில், பால் ஒவ்வாமை எனப்படும் உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் அபாயத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாடிக்கையாளரால் வாங்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுகள் பிப்ரவரி 11, 2025 வரை நல்லபடியாக இருக்கும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், அதன் தயாரிப்புகள் மீது எழுந்த பிரச்சனை காரணமாக சில்லறை வர்த்தகம் & பிற நிறுவனங்களில் இருந்தும் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. Drone Blast: அடுக்குமாடி கட்டிடத்திற்கு அருகே திடீரென வெடித்து சிதறிய டிரோன்; ரஷியாவில் பகீர் சம்பவம்.!
பால் ஒவ்வாமை (Milk Allergies):
பால் ஒவ்வாமை (Milk Allergies Lays Chips) என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் பிரச்சனை ஆகும். இவை தோல், சுவாசக்குழாய், இதயத்தில் பாதிப்புகளை உண்டாகும். இதன் அறிகுறியாக படை, குமட்டல் - வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, அரிப்பு, உதடு, நாக்கு, தொண்டை பகுதியில் கூச்ச உணர்வு அல்லது வீக்கம், மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல், உணவு விழுங்குவதில் சிரமம், தலைசுற்றல், இரத்த அழுத்தம் குறித்தல், சுயநினைவுக்கு இழப்பு போன்றவை ஆகும். கெட்டுப்போன பாலில் இருந்து, அதன் ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மை மாறுபடுகிறது. பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனம் (US Food & Drug Administration FDA) மேற்கூறிய விஷயம் தொடர்பாக விசாரித்தும் வருகிறது. இதனாலேயே லேஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)