டிசம்பர் 21, காசன் (World News): நேட்டோ படைகளுடன் இணையும் முடிவை உக்ரைன் நாடு கைவிட வேண்டும் என, சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைன் நாட்டின் மீது, ரஷியா போர்தொடுத்து சென்றுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் - ரஷியா இடையே போர் தொடருகிறது. அமெரிக்கா கொடுக்கும் ஆயுதங்களை வைத்து உக்ரைன் போராடி வருகிறது. ரஷியா (Ukraine Russia War) சொந்த ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துகிறது. உலகளவில் பதற்றத்தை அதிகரித்த விஷயங்களில் ஒன்றாக, இன்று வரை உக்ரைன் - ரஷியா போர் நடந்து வருகிறது. இதனிடையே, இன்று ரஷ்யா நாட்டில் உள்ள காசன் நகரில், டிரோன் ஒன்று உயரமான கட்டிடத்திற்கு அருகில் சென்று வெடித்துச் சிதறியது. டிரோன் உக்ரைனில் இருந்து தாக்குதல் நடத்த வந்ததா? என ரஷ்ய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. Shocking Video: மக்கள் கூட்டத்தின் நடுவே தறிகெட்டு புகுந்த கார்; 2 பேர் பலி., 68 பேர் படுகாயம்..! பதறவைக்கும் காட்சிகள்.! 

டிரோன் பறந்து சென்று ரஷியாவின் காசன் நகரில் வெடித்துச் சிதறிய காட்சிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)