New Year 2024 Sun Rise: களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்: ஆண்டின் முதல் சூரிய உதயம்.. அட்டகாசமான காணொளிகள் இதோ.!
தொழில்நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வரம் காலத்தில், மனிதர்களின் உணர்வுகளை நிலைத்தன்மை பெறச்செய்யும் கொண்டாட்டங்களில் புத்தாண்டு முக்கியமான ஒன்றாக கவனிக்கப்படுகிறது.
ஜனவரி 01, சென்னை (Chennai): மகிழ்ச்சி, கவலை, ஏக்கம், துரோகம், இன்பம், வாழ்க்கை பாடம் என பல விஷயங்களை கற்றுக் கொடுத்த 2023 ஆம் ஆண்டு நிறைவு பெற்று, 2024 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் சிறப்பாக அமைய லேட்டஸ்ட்லி நிறுவனத்தின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சாதனை ஆண்டாக மாற்றுங்கள்: இந்த ஆண்டில் நமது பணிகள் சிறக்கவும், நாம் தொடர்ந்து நமது அயராத உழைப்பை வெளிப்படுத்துவோம். எனினும் உடல் நலனையும் கருத்தில் கொண்டும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு புத்தாண்டை போல இந்த ஆண்டும் கடந்து சென்று விடாமல், இந்த ஆண்டினை சாதனை ஆண்டாக மாற்றுவது நமது கைகளில் இருக்கிறது. Vaarai Rathnam Song: கேட்கக்கேட்க வெறியாகுதே.. "வாராய் ரத்னம்" படத்தின் பாடல் வெளியீடு; வெறியோடு களமிறங்கும் விஷால்.!
ஆண்டின் முதல் சூரிய உதயம்: நடப்பு புத்தாண்டில் சூரிய உதயம் நமது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் உணர்வாக இருக்கும் என்ற நோக்கில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் புத்தாண்டு நாளான இன்று சூரிய உதயம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. சூரியனின் உதயத்தை போன்று நீங்களும் பிரகாசமாக ஒளிருங்கள், அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஹவுரா நதி பாலம் அருகில் இருந்து எடுக்கப்பட்ட சூரிய உதயம்:
ஒடிஷா மாநிலத்தின் பூரி கடற்கரையில் சூரிய உதயத்தை நேரில் கண்டுகளித்த பொதுமக்கள்:
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில், கண்கவர் சூரிய உதயம்: