Varalakshmi Vratham 2024: மாங்கல்ய பலம் அதிகரிக்க, வெற்றி கிடைக்க வரலட்சுமி விரதம்; வாழ்த்து செய்தி, நல்ல நேரம் குறித்த விபரங்கள் இதோ.!
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் வரலட்சுமி விரதம், உங்களின் வாழ்க்கைக்கு ஏதேனும் ஒரு வரையில் முன்னேற்றத்தை வழங்கும் என்பதால், வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளும் ஆன்மீக பக்தர்களுக்கும் லேட்டஸ்டலி தமிழ் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் 12, சென்னை (Chennai): Varalakshmi Vratam Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varalakshmi Vratam 2024: மனமுருகி வேண்டினால் நாம் கேட்ட வரங்களை குவிக்கும் அன்னை வரலட்சுமி தேவி (Varalakshmi), தன்னை வணங்குவோருக்கு நன்மையை அருள்பவர். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம், செல்வம், தைரியம், வெற்றி, கல்வி, பதவி, குழந்தைப்பேறு என அனைத்து விதமான நன்மையையும் கிடைக்கும். சாருமதி என்ற பெண்மணி, மகத நாட்டில் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை இறைவனாக எண்ணி பணிவிடை செய்து வந்துள்ளார்.
சாபத்தையும் நீக்கும் வரலட்சுமி விரதம்:
அவரின் மனசாட்சி மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை வழங்கவே, இரவில் சாருமதியின் கனவில் தோன்றி தன்னைத் துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்வோரின் இல்லத்தில் நான் இருப்பேன் என்று கூறி, விரதத்திற்கான வழிமுறையையும் எடுத்துரைத்தார். அதன்படி, சாருமதியும் வரலட்சுமி விரதம் இருந்து பலனை பெற்றார் என்பது முன்னோர் வாக்கு. இறைவனால் பெறப்பட்ட சாபத்தையும் நீக்கி, நற்பலன் வழங்கும் தன்மை கொண்ட வரலட்சுமி விரதத்தை நாம் மேற்கொண்டால் பதவி கைகூடும், செல்வ செழிப்புடன் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும், குழந்தைப்பேறு பாக்கியம் உண்டாகும், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
வரலட்சுமி நோன்பு 2024:
புண்ணிய நதியில் நீராடி, தாமரை மலர்கள் கொண்டு, மஞ்சள் நிறத்தினாலான புத்தாடை உடுத்தி வரலட்சுமி அம்மனை விரதமிருந்து வழிபடுவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெற உதவி செய்யும். வீட்டில் விரதம் இருப்போர் அம்மனுக்கு பிடித்த சோறு, பருப்பு வடை, பாயசம், கொழுக்கட்டை, பழங்கள் போன்றவற்றை வைத்து படைக்கலாம்.வைகுந்த பாக்யத்தை அருளும் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து, ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய எமது லேட்டஸ்ட்லி நிறுவனமும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறது. 2024ம் ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் என்பது 16 ஆகஸ்ட் 2024 அன்று சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வழிபாடு நடத்த நல்ல நேரமாக காலை 12:15 மணிமுதல் 01:15 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது. மாலை 04:45 மணிமுதல் 05:45 மணிவரை கணிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் உங்களுக்காக, உங்களின் அன்புள்ள சொந்தத்திற்காக, நண்பர்களுக்காக வரலட்சுமி விரத வாழ்த்து செய்தியும் புகைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் உங்களின் அன்புள்ளவர்களுக்கு பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் ஆன்மீக நெஞ்சங்களே!
1) உங்களின் வாழ்க்கையை ஆரோக்கியம், செல்வம், சுதந்திரத்தால் அன்னை வரலட்சுமி நிரப்பட்டும்!
2) அன்னை ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமான வரலட்சுமி தேவி அருள் உங்களுக்கும், உங்களின் குடும்பத்திற்கும் கிடைக்கட்டும்!
3) செல்வம், பூமி, கல்வி, அன்பு, புகழ், அமைதி, இன்பம், வலிமை ஆகிய 8 சக்தியை லட்சுமி தேவி உங்களுக்கு வழங்கட்டும்!
4) வரலட்சுமியை வணங்கி உங்களின் வாழ்நாள் துணையை கரம்பிடிக்க ஒவ்வொரு பெண்களுக்கும் இனிய வரலட்சுமி விரதம் நல்வாழ்த்துக்கள்!
5) வாழ்நாளில் வளம்பெருகி, இன்பங்கள் அதிகரிக்க, கனவு நனவாக அன்னை வரலட்சுமி தேவியை வணங்குவோம்!
6) உங்களுக்கும், உங்களின் குடும்பத்திற்கும் எனது இனிய வரலட்சுமி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!
7) வரலட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்களின் வாழ்க்கையில் செழிப்பை உண்டாக்க இனிய வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்!
8) உங்களின் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மென்மேலும் அதிகரிக்க வரலட்சுமி விரத நல்வாழ்த்துகள்!
வரலட்சுமி விரதம் உங்களுக்கான நற்பலன்களை கொண்டு வந்து, வாழ்க்கையில் செழிப்பை உண்டாக்க எமது லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது .
(The above story first appeared on LatestLY on Aug 15, 2024 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

