Summer Health Tips: கோடைகாலத்தில் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டிய காய்கறிகள்.. லிஸ்ட் இதோ.!

கோடையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய நாம் சாப்பிடும் உணவு முறைகள் குறித்த விஷயத்திலும் தெளிவான நிலை என்பது இருக்க வேண்டும். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடல் சூடு அதிகப்படுத்தாத உணவுகளை நாம் தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

Summer Vegetable Tips (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 17, சென்னை (Health Tips): இந்திய நிலப்பரப்பில் கோடை காலம் கடுமையான வெயில் சுட்டெரிக்கும். இவ்வாறான சமயங்களில் உடலில் நீர்சத்து, ஊட்டச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியமான ஒன்றாகும். அதேபோல, உடலில் பசியின்மை, உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும். நாம் சாப்பிடும் உணவுகள் நமது உடலின் நலத்தை பாதுகாக்கின்றன. இவ்வாறான சமயங்களில் நாம் தவிர்க்க வேண்டிய காய்கறிகள், சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் இருக்கின்றன. அவை குறித்து இன்று காணலாம்.

கத்தரி:

கத்தரிக்காய் உடலுக்கு நன்மை எனினும், அது உடல் சூடை அதிகரிக்கும். இதனால் கத்தரிக்காயை கோடையில் குறைவாக எடுக்க வேண்டும். அதேபோல, அலர்ஜி மற்றும் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை உடையோர் கத்தரிக்காயை தவிர்க்கலாம்.

முள்ளங்கி:

குளிர்காலத்தில் உடலுக்கு நன்மை செய்யும் முள்ளங்கி கோடையில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். கோடையில் முள்ளங்கியை சாப்பிடுவது வயிறு உப்புச பிரச்சனைகளை ஏற்படுத்தும். முள்ளங்கியில் நீர்சத்து உள்ளது என்றாலும், வயிறு சார்ந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இதனால் முள்ளங்கியை கோடையில் தவிர்ப்பது நல்லது.

சின்ன வெங்காயம்:

உடலுக்கு குளிர்ச்சியை தரும் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து சமைத்து அதிகம் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் பிரச்சனையை உண்டாக்கும். கோடையில் காரக்குழம்பு, புளிக்குழம்பு வகைகளில் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து சமைக்கப்படும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது. Vellarikai Kootu Recipe: வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..! 

கடுகு கீரை:

உடல் சூடு அதிகப்படுத்தும் தன்மை கொண்ட கடுகு கீரை குளிர்காலத்திற்கு ஏற்றது ஆகும். இது செரிமான செயல்பாடுகளில் தடையை கோடையில் ஏற்படுத்தும். வயிறு & குடல் எரிச்சலாகும். கோடையில் கீரை வகைகளை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

பீட்ரூட்:

உடலுக்கு நீர்ச்சத்தை கொடுக்கும் உணவுகளில் பீட்ரூட்டுக்கு இடம் உண்டு என்றாலும், உடல் சூடும் அதிகரிக்கும். கோடை காலத்தில் சரும பிரச்சனைகள், சிலருக்கு கொப்புளங்களும் ஏற்படும். இதனால் குறைந்த அளவில் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது.

பாகற்காய்:

நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து என போற்றப்படும் பாகற்காய், டையூறிக் பண்பு கொண்டது ஆகும். இதனால் சிறுநீர் உடலில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும். உடலில் இருந்த நீர்ச்சத்தையும் பாகற்காய் வெளியேற்றும் தன்மை கொண்டது. ஆகையால் பாகற்காயை கோடையில் தவிர்ப்பது நல்லது.

அதேபோல, கோடையில் சாலட் வகை காய்கறிகளை தவிர்க்கலாம். இவை உடல் சூடை அதிகரிக்கும். வெள்ளரிக்காய், புடலங்காய், பூசணிக்காய், சுரைக்காய், புதினா, எலுமிச்சை, பீர்க்கங்காய் போன்ற காய்கறிகள் உடலுக்கு குளிர்ச்சியை தரும். கோடையில் இவ்வாறான காய்கறிகளை சுழற்சி முறையில் சாப்பிடலாம்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement