Vinayagar Jayanthi 2025: விநாயகர் ஜெயந்தி 2025 எப்போது? நல்ல நேரம், விரத வழிபாடு முறைகள் என்னென்ன? விளக்கம் இதோ.!
ஆன்மீக பக்தர்களிடையே மிகப்பெரிய தெய்வங்களில் ஒன்றாக கருதப்படும் விநாயகரின், மாத சதுர்த்தி திதி பிப்ரவரி 01 அன்று சிறப்பிக்கப்படுகிறது.
ஜனவரி 28, சென்னை (Chennai): இந்து வழிபாட்டு முறைகளில், முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு, ஆணை முகத்தான், கணேசன் என பல பெயர்கள் உண்டு. இந்தியாவில் உள்ள பரவலான மக்கள் நம்பிக்கையுடன் வணங்கும் விநாயகர், எந்த சூழ்நிலையில் உள்ள வீட்டுக்கும் அழைத்தால் வரும் எளியவர் ஆவார். இந்து மதத்தின் ஆதி தெய்வங்களாக கருதப்படும் சிவன் - பார்வதி தம்பதிக்கு மகளாக பிறந்த விநாயகர், ஒட்டுமொத்த இந்திய அளவிலும் கவனிக்கப்பட்ட மிகப்பெரிய தெய்வங்களில் ஒன்றாக கருதப்படுகிறார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படுவதைப்போல, ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி தினத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விநாயகர் ஜெயந்தி (Ganesh Jayanthi 2025) நாளாக சிறப்பிக்கப்படுகிறது.
கணேஷ் ஜெயந்தி 2025 (Ganesh Jayanthi 2025):
அந்த வகையில், பிப்ரவரி மாதத்தில், கணேஷ் ஜெயந்தி 01 பிப்ரவரி 2025 அன்று சிறப்பிக்கப்படுகிறது. தமிழ் மாதத்தில் தை 20 அன்று கணேச சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தி தினம், விநாயகரை குறிக்கும் நிலையில், இந்திய அளவில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படும். ஆனால், மாத சதுர்த்தியின் அடிப்படையிலும் விநாயகர் ஜெயந்தி சிறப்பிக்கப்படுகிறது. அன்றைய நாளில் விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். விநாயகரை வணங்கினால் வாழ்வில் நலம் உண்டாகும், தடைகள் அகலும், சனியின் தாக்கமே இருந்தாலும் விநாயகனின் மந்திரத்தை சொன்னால் கட்டுப்படும் எனப்து ஆன்மீக நெஞ்சத்தின் ஐதீகம். விநாயகரை தொழுது வாழ்வில் முன்னேற்றம் பெற உழைப்பை வெளிப்படுத்தி நல்லெண்ணத்துடன் முன்னேற லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

