Illegal Affair Suicide (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 16, சென்னை (Chennai): இந்த உலகம் முழுவதும் கலாச்சாரமானது விவேகமாக மாறி வருகிறது. திருமணத்திற்கு மீறிய உறவுகளில் இருப்பது சர்வ சாதாரணமாகவும் அரங்கேறி வருகிறது. இந்த நம்பிக்கை மீறலுக்கான காரணங்கள் பல உள்ளன. ஆனால் திருமணத்திற்கு புறமான உறவுகளில் ஈடுபடுவதற்கான அடிப்படை காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் நாம் காணலாம். Rajinikanth Condolences Dwarakish: சூப்பர் ஸ்டார் படங்களை தயாரித்த நடிகர் துவாரகிஷ் மரணம்.. ரஜினிகாந்த் இரங்கல்..!

அதில் முதல் காரணமாக பார்க்கப்படுவது புரிதல் தான். தன் துணையை விட மற்றொருவர் அதிக புரிதல் மற்றும் தோழமை வைக்கும் பொழுது ஈர்க்கப்படுகிறார்கள். அதே நேரம் திருமண உறவில் ஏற்படும் பாலியல் அதிருப்தி காரணமாகவும் மற்றொரு வாழ்க்கை துணையை தேடுகிறார்கள். புதுமையின் கவர்ச்சி மற்றும் புதிய அனுபவ பாலியல் தான் திருமணத்திற்கு புறம்பான உறவின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஒரு சிலரோ சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக மற்றொரு உறவு சிக்கலில் சிக்கி விடுகின்றனர். மேலும் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படும் பொழுது, அதை சரி செய்யாமல் மற்றவரிடம் பாலியல் ரீதியாக பழக நினைப்பது கள்ளத்தொடர்பிற்கான காரணமாக அமைகின்றது.