நவம்பர் 04, கண்ணூர் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்திலிருந்து, புதுச்சேரி நோக்கி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்தது. இந்த ரயிலில் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரும் பயணம் செய்தார். அந்த ரயில் கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்திற்கு நேற்று (நவ.3) காலை 8 மணியளவில் வந்தது. -அப்போது, மாணவி ரயிலில் இருந்து இறங்கி கடையில் தனக்கு தேவையான பொருள் வாங்கிக்கொண்டு இருந்தார். அவர் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்போதே ரயில் கிளம்பியது. இதனைப் பார்த்த மாணவி வேகமாக சென்று ஓடும் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார். Man Choked to Death: பசியில் வேகமாக முட்டையை சாப்பிட்ட முதியவர்.. தொண்டையில் சிக்கியதால் பலியான சோகம்.!
இதில் மாணவி திடீரென கால் தவறி ரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையில் சிக்கி விழுந்தார். இதனைப் பார்த்த சக பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின் மாணவி ரயில் தண்டவாளத்தில் சிறு காயங்களுடன் உயிருடன் இருப்பதை கண்டனர். உடனடியாக அவரை மீட்ட ரயில்வே காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி:
A Nursing Girl fallen below the train from #KannurRailwayStation, while trying to climb the running train,as CCTV shows she got off the train to buy some food from stall, oh God she is safe 😔#NambiarAdarshNarayananPV #Kannur #AshwiniVaishnaw #SB19 @RailMinIndia #Dhanteras pic.twitter.com/uOFhPVof5i
— Nambiar Adarsh Narayanan P V (@NaAdarshNaPV) November 3, 2024