Tirupathur Accident: வினையில் முடிந்த விளையாட்டு; கார் மோதி முதியவர் பரிதாப பலி., பதறவைக்கும் காட்சிகள்.!

தந்தை - மகனின் விளையாட்டுத்தனமான செயல் 60 வயது முதியவரின் உயிரை பறித்த கொடூரம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. குழந்தைகளுடன் வாகனங்களில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.

Tirupathur Accident: வினையில் முடிந்த விளையாட்டு; கார் மோதி முதியவர் பரிதாப பலி., பதறவைக்கும் காட்சிகள்.!
Tirupathur Accident Death (Photo Credit: Facebook)

நவம்பர் 11, திருப்பத்தூர் (Tirupathur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் வசித்து வருபவர் குப்புசாமி. இவரின் மகன் முத்து (வயது 60). இவரின் தங்கை மகன் வெங்கடேசன் (வயது 24). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 4 வயதுடைய குழந்தை இருக்கின்றனர். கடந்த நவம்பர் 02ம் தேதி அன்று 4 வயது மகனுடன், வெங்கடேசன் காரில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தார். Virudhunagar: விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு; 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை - முதல்வர் அறிவிப்பு.! 

தந்தை - மகனின் விளையாட்டால் விபரீதம்:

அப்போது, காரை ஆன் செய்து நிறுத்திவிட்டு, அதிக ரேஸ் கொடுத்து தந்தை - மகன் விளையாடியதாக தெரியவருகிறது. அப்போது சிறுவன் எதிர்பாராத விதமாக கியரை பிடித்து மாற்றிவிடவே, வாகனம் அதிக வேகத்தில் சீறிப்பாய்ந்து முத்துவின் மீது மோதி தூக்கிச்சென்று நின்றது.

முதியவர் சிகிச்சை பலனின்றி பலி:

இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் முத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்று முன்தினம் (நவ.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக திருப்பத்தூர் நகர காவல்துறையினரும் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதன் அதிர்ச்சிதரும் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சிறுவர்களுடன் விளையாட்டுத்தனமாக வாகனங்களின் ஆபத்து புரியாமல் விளையாடினால், எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.

கார் மோதி முதியவர் இழுத்துச்செல்லப்படும் பதறவைக்கும் காட்சி:

வீடியோ நன்றி: புதிய தலைமுறை

(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 08:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).