Bomb Threat: சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிகாரிகள் சோதனை தீவிரம்.!
ஆர்.ஏ புரத்தில் செயல்பட்டு வரும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் பள்ளியில் குழந்தைகள் இல்லை.
மே 24, சென்னை (Chennai): சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம், ஆர்.ஏ புரம் பகுதியில் செட்டிநாடு வித்யாஷ்ரம் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால், பள்ளியில் அலுவலக நிர்வாகிகள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனிடையே, இன்று செட்டிநாடு வித்யாஸ்ரமம் (Bomb Threat on Chettinad Vidyashram) தனியார் பள்ளிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cyclone Remal Live Tracker on Windy.com: ரிமால் புயலின் நகர்வுகளை நேரடியாக கண்காணிப்பது எப்படி?.. முழு விபரம் உள்ளே.!
அதிகாரிகள் சோதனை தீவிரம்: தகவலை அறிந்ததும் உடனடியாக பள்ளிக்கு விரைந்த காவல் துறையினர், பள்ளி வளாகத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு கருவிகளுடன் ஆய்வு நடத்துகின்றனர். மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து பட்டினம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு கருதி பள்ளியில் இருந்த அனைவரும் கட்டிட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேற்படி விபரங்கள் காத்திருக்கின்றன.
(The above story first appeared on LatestLY on May 24, 2024 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

