ஏப்ரல் 21, ட்ரெண்டிங் வீடியோ (Trending Video): வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள், பரிணாம வளர்ச்சிக்கேற்ப ராணுவத்திலும் பிற்காலத்தில் ஈடுபடுத்தப்பட்டது. வீடுகளில் நாம் அன்புடன் வளர்க்கும் நாய்கள், பெரும்பாலும் பயிற்சி இல்லாமல் வளர்க்கப்படுவது இயல்பு. பல ஆண்டுகள் கழித்து அவை நமது செயல்பாடுகளை புரிந்து கொண்டு நமது பேச்சுக்கேற்ப ஒரு சில விஷயங்களை செய்யும். ஒரு சில நாய்கள் தனித்துவமாக சுய அறிவு கொண்டு நமக்கு மிகுந்த பாதுகாப்பாகவும் இருக்கும்.
தனித்துவ பயிற்சிபெறும் நாய்கள்: ஆனால், இராணுவத்தில் உள்ள நாய்கள் முழுவதுமாக பாதுகாப்பு ரீதியான காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதால், அவைகளுக்கு பிரத்தியேக பயிற்சி வழங்கப்படும். தனது கமாண்டரின் உத்தரவுக்கு கீழ்படிந்து கண் இமைகளை கூட மூடாமல் அவை செயல்படும் தன்மை கொண்டவை ஆகும். அந்த வகையில், ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ பயிற்சிபெற்ற நாய் ஒன்றை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். Vijay Antony Vs Bule Sattai Maran: ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் நடிகர் விஜய் ஆண்டனி Vs திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன்.. ரோமியோ படத்தால் வந்த சர்ச்சை.!
அசத்தல் வீடியோ வைரல்: நாய் தனது கமாண்டரின் உத்தரவை கேட்டு அமர்ந்திருந்தது. பின் ஒரு சில நிமிடங்கள் தனது இயல்பான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நாய், கமாண்டரின் உத்தரவு கேட்டு, அவர் அனுமதியுடன் தனது இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து பின் 30 முதல் நொடிக்குள் மீண்டும் பணிக்கு திரும்பியது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பிரேசில் நாட்டில் எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இல்லை எனினும், பலரின் பாராட்டை பெற்று வருகிறது.
-excuse me sir, can I be a normal dog for a little?
-you have 30 seconds pic.twitter.com/3uf32DpbHU
— out of context brazil 🇧🇷 (@oocbrazill) April 19, 2024