Free Food: மாமியார் மருமகளுக்கு உணவு இலவசம்.. ஈரோடு உணவகத்தின் அதிரடி அறிவிப்பு..!

மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவு இலவசம் என ஈரோடு பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Free Food: மாமியார் மருமகளுக்கு உணவு இலவசம்.. ஈரோடு உணவகத்தின் அதிரடி அறிவிப்பு..!
Free Food (Photo Credit: @RuchiiBlackrock X)

மார்ச் 07, ஈரோடு (Erode): ஈரோடு பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மாமியார் மருமகளுக்கு (mother-in-law and daughter-in-law ) ஊட்டி விட்டால் உணவு இலவசம் என்று அறிவித்துள்ளார். Earthquake Hits China: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... பீதியடைந்த மக்கள்..!

இது குறித்து அந்த உணவக உரிமையாளர் கூறியதாவது, "மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதால், எங்கள் உணவகத்திற்கு வரும் மாமியார் மருமகள்கள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிக்கொண்டால் அவர்கள் சாப்பிடும் உணவு இலவசம் என்று அறிவித்துள்ளோம். இந்த அறிவிப்புக்கு ஈரோடு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, ஏராளமான மாமியார் மருமகள்கள் எங்கள் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக் கொள்கின்றனர். மகளிர் தினத்தில் மாமியார் மருமகள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த முறையை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம்" என்று கூறியுள்ளார்.'

(The above story first appeared on LatestLY on Mar 07, 2024 06:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).