Vijay's Security Pointing Gun: விஜய் ரசிகரின் நெற்றியை குறிவைத்த துப்பாக்கி.. பாதுகாவலரின் பகீர் செயல்.!
விஜயை நேரில் பார்க்க முற்பட்ட ரசிகரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.
மே 07, மதுரை (Madurai News): தமிழ் திரைப்பட நடிகர் விஜய், 2026 தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பங்கேற்கவுள்ளார். இதனால் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் கட்சியாக தோற்றுவித்தவர், அதனை அதிகாரபூர்வமாக பதிவு செய்து அரசியல் களப்பணிகளை முன்னெடுத்து இருக்கிறார். தற்போதைய நிலையில் கட்சி நிர்வாகிகள் நியமனம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. விரைவில் நடிகர் விஜய் தலைமறையில் 234 தொகுதியிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Goundamani Wife Death: கவுண்டமணி மனைவி மரணம்.. பிரபலங்கள் கண்ணீர் இரங்கல்.. என்ன சொன்னார்கள் தெரியுமா?
மதுரையில் விஜய் தரிசனம்:
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் எச். வினோத்துடன் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பயணத்துக்கு முன்னர் நடிகர் விஜய் நடிக்கும் இறுதி திரைப்படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், நடிகர் விஜய் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகப்பெரிய சவால் சூழ்நிலையை அடைந்துள்ளது. சமீபத்தில் மதுரைக்குச் சென்ற நடிகர் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் விமான நிலையத்தை சூழ்ந்துகொண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்து இருந்தனர்.
நெற்றிப்பொட்டில் துப்பாக்கி:
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவுபெற்றதும் நடிகர் விஜய் மதுரை விமான நிலையத்துக்கு வந்து சென்னை புறப்பட்டார். விமான நிலையத்துக்கு விஜய் வந்தபோது ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியால் அவரை நெருங்க முற்பட்டார். அச்சமயம் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து ரசிகரின் நெற்றிப்பொட்டு அருகே வைத்து பின் எடுத்தார். பிற பாதுகாவலர்கள் ரசிகரை பிடித்துக்கொண்டதும் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைத்தார். இதுகுறித்த காட்சியால் வெளியாகி கண்டனத்தை குவித்து வருகின்றன. ஆனால், துப்பாக்கி எடுத்த சம்பவம் எனக்கே தெரியாது என ரசிகர் கூறியதுதான் பரிதாபத்தின் உச்சம்.
சர்ச்சைக்குரிய வீடியோ:
SHOCKING: Joseph Vijay's security points firearm🔫 on a person. pic.twitter.com/CA2A2aBXl6
— Manobala Vijayabalan (@ManobalaV) May 5, 2025
(The above story first appeared on LatestLY on May 07, 2025 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

