Disturbing Video: சுயநினைவின்றி கிடந்த இளைஞரின் மீது சிறுநீர் கழித்த கொடுமை; கடுமையாக தாக்கி வெறிச்செயல்.. அதிர்ச்சி வீடியோ லீக்.!
இளைஞரை கடுமையாக தாக்கி சுயநினைவு இன்றி இருக்கும்போது, அவரின் முகத்தில் சிறுநீர் கழித்த கொடுமை ஆக்ராவில் நடந்தது அம்பலமாகியுள்ளது.
ஜூலை 25, ஆக்ரா (Uttar Pradesh News): சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞரின் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் உடனடியாக கைது செய்தனர்.
மாநில அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு அளிக்கப்பட்டது. அம்மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட இளைஞரை நேரில் அழைத்து தனது கைகளால் கால்களை கழுவிவிட்டு வீட்டில் விருந்தளித்தார். இந்த சம்பவத்தின் சர்ச்சை முடிவதற்குள் அடுத்தடுத்த பல துயரங்கள் இதே போல நடந்தவை பல மாநிலங்களில் இருந்து விடியோவாக பெறப்பட்டன. இவை குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட கொடூர சம்பவத்தின் அதிர்ச்சி காணொளியும் வெளியாகி, அக்குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கம் மாநிலத்திலும் 2 பெண்களை கட்டிவைத்து பெண்களே சேர்ந்து கும்பலாக தாக்கிய பயங்கரம் நடந்தது. சாதிய பாகுபாடு காரணமாக நடந்த பல துயரங்கள் அதிர்வலையை பதிவு செய்து வருகின்றன. Blood Pressure: உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுறீங்களா?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் நடந்த துயரத்தின் வீடியோ வெளியகியுள்ளது. ஆதித்யா என்ற இளைஞர், மற்றொரு இளைஞரை கடுமையாக தாக்கி சுய நினைவை இழந்து கிடப்பவரின் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார். இச்சம்பவம் கடந்த 3-4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் நிலையில், வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
இதனையடுத்து, காணொளி ஆக்ரா காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு செல்லவே, அவரின் உத்தரவின் பேரில் விசாரணை நடந்து ஆதித்யா அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதித்யாவிடம் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட தரப்பில் தற்போது வரை புகார் அளிக்கப்படவில்லை என்றாலும்,
TW: Disturbing video, abusive content
In UP's Agra, a purported video of a man urinating on the victim lying semi unconscious on the ground and bleeding profusely has surface on social media. The video is claimed to be 3-4 months old. Main accused has been identified as Aditya. pic.twitter.com/ktSNDIqrSV
— Piyush Rai (@Benarasiyaa) July 24, 2023
(The above story first appeared on LatestLY on Jul 25, 2023 08:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

