Mia Khalifa Banner For Aadi Perukku Festival: அம்மன்கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்த மியா; ரசிகர்களின் சர்ச்சை செயலால் பரபரப்பு..!

காஞ்சிபுரத்தில் உள்ள குருவிமலை பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவிழா பேனரில், ஆபாச பட நடிகை மியா கலிஃபா புகைப்படம் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mia Khalifa Banner For Aadi Perukku Festival: அம்மன்கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்த மியா; ரசிகர்களின் சர்ச்சை செயலால் பரபரப்பு..!
Mia Khalifa Banner For Aadi Peruku Festival (Photo Credit: @ians_india X)

ஆகஸ்ட் 08, காஞ்சிபுரம் (Kanchipuram News): ஆடி மாதத்தில் பல கோவில்களில் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆடி மாதங்களில் (Aadi Month 2024) குலதெய்வம் கோயிலுக்கு செல்வதும் அம்மன் கோயிலுக்கு செல்வதும் வழக்கமாக உள்ளது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயில் வளாகத்தில், ஸ்ரீ நாகாத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 12 ஆண்டுகளாக நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயிலுக்கு கிராம மக்கள் ஆடி மாத திருவிழா (Aadi Perukku Festival) எடுத்து வருவது வழக்கம். அந்தவகையில் நாளை (ஆகஸ்ட் 09) ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயிலில் வளைகாப்பு வைபோக விழா நடைபெறுகிறது. இதன் முன்னேற்பாடுகளை கிராம விழா குழுவினர் செய்து வருகின்றனர். TN Weather Update: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

சர்ச்சைக்குரிய பேனர்:

இந்நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் திருவிழாவை முன்னிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேனர் (Banner) வைத்துள்ளனர். அந்த பேனரில் ஆதார் கார்டு வடிவில் பேனர் வைத்தவர்களின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்டவைகள் குறிப்பிட்டுள்ளன. மேலும், 'எங்க பாசம் ஊரே பேசும்' என்ற வாசகங்களுடன் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மன் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கும் பக்கத்தில், பிரபல ஆபாச பட நடிகை மியா கலிஃபா (Mia Khalifa) மஞ்சள் உடையில் பால்குடம் எடுத்துச் செல்லும் புகைப்படம் இடம்பெற்றிருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருவிழாக்களில் சினிமா நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் இடம் பெறுவது உண்டு. ஆனால், இந்த பேனரில் மியா கலிஃபா இடம் பெற்றிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போது, இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).