ஜூன் 29, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 63, பி பிளாக் பகுதியில் ரிங்கு என்ற பெண்மணி தனது 1 வயது குழந்தை மற்றும் கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பெண்மணி தனது வீட்டின் வாசலில், சாலைக்கு மிக அருகில் கைக்குழந்தையுடன் விளையாடிக்கொண்டு இருந்தார். Instagram Service Down: ரீலிஸ், ஸ்டோரி பக்கங்களை பார்க்க முடியாமல் அவதிப்படும் பயனர்கள்; உலகளவில் முடங்கியது இன்ஸ்டாகிராம்.!
தாயின் கண்முன் நொடியில் நடந்த சோகம்:
அச்சமயம், இவர்களின் வீட்டை நோக்கி வந்த கார் ஒன்று, குழந்தை வழியில் இருப்பதை கவனிக்காமல் அதன் மீது காரின் சக்கரத்தை ஏற்றி-இறக்கியது. இந்த விபத்தில் உடல் பாகங்கள் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட சிறுமி, தாயினால் உடனடியாக பதறியபடி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள கைலாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட சிறுமி, உயிருக்கு ஆபத்தான வகையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கார் ஓட்டுனரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
A little girl playing with her mother in front of the house was crushed by a car right in front of her mother
The incident took place in B block of Sector 63A, #Noida
The seriously injured girl is admitted to Kailash Hospital
The video has gone #viral on social media pic.twitter.com/C2b8cNipPc
— Siraj Noorani (@sirajnoorani) June 29, 2024