Viral: ஒரேவார்த்தை பிழையானதால் பதறிப்போன வங்கி அதிகாரி; நூறுக்கும், கணவருக்கும் வித்தியாசம் தெரியாததால் சோகம்.!
தொழில்நுட்ப உலகத்துக்கு ஏற்ப நமது திறன்களை வடிவமைத்து மாற்றிக்கொள்ளாத பட்சத்தில், நானும் இவ்வுலகில் சிறந்த கண்டென்ட்டுகளாக பார்க்கப்படுவோம் என்பதற்கு சாட்சியாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 26, சீமகுர்த்தி (Viral News): இந்தியர்கள் எப்போதும் பிற நாட்டவரை விட சற்று அதிக குறும்புத்தனம் கொண்டவர்கள் என்பது உலகறிந்த விஷயம். பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், அவர்களிடம் பேச தொடங்கிவிட்டால் தங்களின் குறும்புத்தனத்தை கட்டாயம் காண்பித்துவிடுவார்கள்.
குறும்பு நம்மிடையே ஒட்டிப்பிறந்தது என்றாலும், நமது அறியாமை விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப உலகத்துக்கு ஏற்ப நமது திறன்களை வடிவமைத்து மாற்றிக்கொள்ளாத பட்சத்தில், நானும் இவ்வுலகில் சிறந்த கண்டென்ட்டுகளாக பார்க்கப்படுவோம் என்பதற்கு சாட்சியாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, கடந்த ஜூலை 12ம் தேதி 2018ல் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டம், சீமகுர்த்தி நகரில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்ற பெண்மணி, ரூ.1500 பணம் வேண்டி பணம் பெறுதலுக்கான வங்கி படிவத்தை பூர்த்தி செய்துள்ளார். Harmanpreeth Kavur: 2 போட்டிகள் விளையாட ஹர்மன்பிரீத்-க்கு தடை?; விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு.. அடுத்தது இதுதான்.!
அந்த படிவத்தில் ஆங்கிலத்தில் One Thousand Five Hundred Rupees என எழுதுவதற்கு பதிலாக, One Husband Five Hundred Rupees என எழுதி கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2018ல் நடந்திருந்த நிலையில், தற்போது அது தொடர்பான வங்கி காசோலை படிவத்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் வடிவேலு நடிப்பில் வெளியான எலி திரைப்படத்தில், வங்கியை கொள்ளையடிக்க சென்று காசாளரிடம் தவறாக அனைத்தையும் எழுதிக்கொடுத்து அல்லோல்படுவார். இந்த நிலையில் தான் மேற்கூறிய சம்பவம் நடந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 26, 2023 12:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

