Mother Puts Baby In An Oven: குழந்தையை ஓவனில் தூங்கவைத்த தாய்.. ஒரு மாத குழந்தை கருகி பலி..!

அமெரிக்காவின் மிஸெளரியில் குழந்தையைத் தொட்டிலில் வைப்பதற்குப் பதிலாக தவறுதலாக ஓவனில் தாய் வைத்ததால், அந்தக் குழந்தை கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Maria Thomas (Photo Credit: @LPaulKang X)

பிப்ரவரி 12, மிஸெளரி (Missouri): அமெரிக்காவின் மிஸெளரி மாகாணம், கன்சாஸ் நகரில் வசிக்கும் குழந்தையின் தாயார் மரியா தாமஸ் (Maria Thomas), என்ற பெண் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அவரது வீட்டுக்கு காவல் துறையினர் சென்றனா். அப்போது, மரியா தாமஸ் தன் குழந்தையை தொட்டிலில் தூங்கவைப்பதற்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவன் அடுப்பில் தவறுதலாக வைத்ததும், அதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். Thoothukudi Murder: தூத்துக்குடியில் பரபரப்பு.. கஞ்சா போதையில் தீட்டிய திட்டம்.. டூவீலரில் சென்று 2 பேர் கொலை..!

இது கவனச்சிதறலால் ஏற்பட்டதா அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கிறது போன்ற விவரங்கள் உறுதிப்படுத்தபடவில்லை. தற்போது ஜாக்சன் கவுண்டி தடுப்பு மையத்தில் மரியா தாமஸ் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடா்பாக குழந்தையின் தாய் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement