Delhi Metro Heated Argument: பெண்கள் பெட்டிக்குள் நுழைந்த இளைஞர்; பயங்கர வாக்குவாதம் செய்த பெண் பயணி.!
தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ இரயில் சேவை, கடந்த 22 ஆண்டுகளை கடந்து தனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. டெல்லி மெட்ரோ சார்பாக 336 இரயில்கள் சேவை தினசரி பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் 26, டெல்லி (Trending Video): மெட்ரோ இரயில் இந்தியாவில் முக்கிய நகர்ப்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்க கொண்டு வரப்பட்டது. இதனால் பொதுமக்கள் துரிதமாக தங்களது பயண இடங்களுக்கு சென்றுசேர முடிகிறது. மேம்பாலம், தரைக்கு அடியில் என மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படுவதால், பெருநகரங்களில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இச்சேவை அமைந்தது.
தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ இரயில் சேவை, கடந்த 22 ஆண்டுகளை கடந்து தனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. டெல்லி மெட்ரோ சார்பாக 336 இரயில்கள் சேவை தினசரி பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 8 வழித்தடங்களில் 391 கி.மீ சேவையை டெல்லி மெட்ரோ இரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. WhatsApp Update: போட்டோவை தொடர்ந்து வீடியோவையும் எச்டி தரத்தில் அனுப்பலாம் – விரைவில் அறிமுகமாகிறது; வாட்சப் அறிவிப்பு.!
சமீபகாலமாகவே மெட்ரோ இரயில் பயணிகள் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளில் நடந்து வருகின்றனர். இரயிலில் அரைகுறை ஆடையுடன் பயணிப்பது, நடனம் ஆடுவது, முத்தம் கொடுப்பது, காதலருடன் சுய இன்பம் செய்வது, தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை அப்பட்டமாக பொதுவெளியில் செய்வது என மக்கள் முகம் சுளிக்கும் செயல்கள் நடக்கின்றன.
இதுதொடர்பான பல்வேறு விடீயோக்கள் வெளியாகிய நிலையில், பயணிகள் வீடியோ எடுத்து புகார் அளிக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட பெட்டியின் எண்ணையும் சேர்த்து புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும். சம்பந்தப்பட்ட நபர் அடையாளம் காணப்படுவார் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பெண்களின் சிறப்பு பெட்டிக்குள் தவறுவதலாக ஏறிய நபர், பெண் பயணியின் கண்டிப்புக்கு எதிர்ப்பு குரல் எழுப்பி வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Kalesh b/w Ladies and a Guy over He Stepped up Into ladies Coach in Delhi Metro pic.twitter.com/wzks795oqW
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 25, 2023
(The above story first appeared on LatestLY on Aug 26, 2023 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

