ShareChat Trap: ஷேர்ஷாட் ஆக்டிவ் சிறுமிகள், பெண்கள் டார்கெட்.. 20 பெண்களின் 1000 ஆபாச படங்கள்.. சிதம்பரத்தில் பிடிக்கப்பட்ட இளைஞனின் பகீர் பின்னணி.!
Chidambaram Sharechat Love Abuse Issue

ஜனவரி 3, சிதம்பரம்: ஷார்சேட் (Share Chat App) செயலியில் ஆக்டிவாக இருக்கும் பெண்களை குழுவைத்து பிடித்த இளைஞன், 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி (Youngster Cheats Girl Trap ShareChat Groups) பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப கயவனின் பகீர் தகவல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குணா. இவர் Sharechat செயலியில் பிரபலமான நபராக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் பெண்களின் கணக்குகளை குறிவைத்து அவர்களுக்கு வலைவீசி தனது காதல் நம்பிக்கைக்குள் கொண்டு வந்துள்ளார்.

இவரிடம் எளிதில் மயங்கிவிடும் பெண்களை காதலிப்பதாக நடித்து, அவர்களின் ஆசையை தூண்டுவது போல பேசி அந்தரங்க வீடியோ & புகைப்படங்களை பெற்றுக்கொண்டு மிரட்டி வந்துள்ளார். ஒருசில பெண்களிடம் குணா பாலியல் ரீதியாக அத்துமீறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. Salem Couple Marriage: சிவன் கோவில் தாலிகட்டி திருமணம் நடத்தி, பெரியார் சிலைமுன் உறுதிமொழி.. பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி புகார்.! 

ஷேர்ஷாட் செயலியில் பெண்களை ஏமாற்றும் குணா, அவர்களுடன் நெருங்கி பழகி தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று முத்தம் கொடுப்பது உட்பட பிற அந்தரங்க விஷயங்களையும் புகைப்படம் எடுத்து வைத்து பணம் பறித்து வந்துள்ளார். இவரிடம் சிக்கி பல பெண்கள் துயரப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக 20 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை குறிவைத்து ஏமாற்றியுள்ள குணா, அவர்களின் பெயர்களை தனது உடலில் கஜினி திரைப்படத்தில் வரும் சூர்யாவை போல பச்சைகுத்தியும் வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமியை அவர் காதல் வலையில் வீழ்த்தி, நெஞ்சில் பிறைநிலாவை பச்சையாக குத்தியுள்ளார்.

Template: Sexual Harassment

குணாவிடம் தற்போது வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த இளம்பெண், சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், சென்னையை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி உட்பட 20 க்கும் மேற்பட்டோர் சிக்கி பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

பெண்களை பகடைக்காயாக பயன்படுத்தி முழுக்க முழுக்க பணம்பறிக்கும் எண்ணத்துடன் இருந்து வந்த குணா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை ஏமாற்றி அவரது உறவினரிடம் ரூ.1.5 இலட்சம் வரை பறித்துள்ளார். அவர் தனது நண்பர்களுக்கு குணாவின் விபரத்தை தெரியப்படுத்தியதன் பேரில் அவர் 2 பேரால் பிடிக்கப்பட்டுள்ளார். TTF Vasan Car: கமலா தியேட்டரில் அப்பாவியாக சிக்கிக்கொண்ட டிடிஎப்.. ரூ.500 அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த அதிகாரிகள்.! 

அவர்கள் குணாவின் சுயரூபத்தை அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் வீடியோ எடுத்து முகநூலில் அதனை பதிவு செய்திருக்கின்றனர். ஷேர்ஷாட் செயலியில் இயங்கி வரும் குழுவை நிர்வகித்து வந்த குணாவின் செல்போனில் ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததும் அம்பலமாகியுள்ளது.

இதில், இறுதியாக குணாவின் வலையில் இருக்கும் பெண்மணியை தொடர்புகொண்டு கண்டித்தபோது, அவர் 19 பெண்களையும் குறைகூறி குணாவின் மீது தவறில்லை என்பதை போல பேசியுள்ளார் என்பது தான் பேரதிர்ச்சியாக உள்ளது. அந்த அளவிற்கு குணா பெண்களை மூளைச்சலவை செய்திடுவது உறுதியாகிறது.

தற்போது குணா சிதம்பரத்தில் வைத்து பிடிக்கப்பட்டதாக அந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டாரா? அவரின் மீது வழக்கு பதியப்பட்டதா? என்ற விபரங்கள் எமது நிர்வாகியால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Note: அன்புள்ள சகோதரிகளே வெறும் புகைப்படத்தால் உங்களின் வாழ்க்கை நிர்மூலமாகிவிடாது. உங்களை புரிந்துகொள்ள ஒருவர் கட்டாயம் இந்த உலகத்தில் உண்டு என்பதை நினைவில் கொண்டு, மேற்கூறிய பிரச்சனை யாருக்கேனும் நடந்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்திடுங்கள்.

அதேபோல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் பெண்களின் அடையாளத்தை குறிப்பிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதையும் வீடியோ எடுப்போர் நினைவில் வையுங்கள். பொதுநலன் கருதி வீடியோ இணைக்கப்படவில்லை.

Police Control Room: 100 

National Child Helpline: 1098

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 3, 2023 05:15 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).